Regional02

மயிலாப்பூர் ரவுடி கொலையில் 5 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரண் :

செய்திப்பிரிவு

சென்னை மயிலாப்பூரில் ரவுடி சிவக்குமார் என்பவர் நேற்றுமுன்தினம் முன்விரோதம் காரண மாக கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக அசோக் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை வழக்கு தொடர்பாக, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சேகர் மகன்கள் அழகுராஜா (22), பாலாஜி (23), விஷ்ணு (20), மயிலாப்பூர் பாண்டியன் (45),ஷெனாய் நகர் ரோகித்ராஜ் (30) ஆகிய 5 பேர் கள்ளக்குறிச்சி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில், நீதிபதி அருண்பாண்டியன் முன்னிலையில் நேற்று சரண டைந்தனர்.

அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT