தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகேயுள்ள சென்னல்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர்கள் செல்வவிநாயகம் மகன் ரமேஷ் (22), ராமையா மகன் சண்முகசுந்தர் (23). இருவரையும் கொலை முயற்சி வழக்கில் முறப்பநாடு போலீஸார் கடந்த 06.02.2021 அன்று கைது செய்தனர். இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.
ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவின் பேரில் ரமேஷ் மற்றும் சண்முகசுந்தர் இருவரும் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.