Regional04

டாரஸ் லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் அன்ன மங்கலம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா(40). போர்வெல் தொழில் செய்துவரும் இவருக்கு ராஜலட்சுமி(27) என்ற மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேப்பூரிலிருந்து பெரம்பலூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் எதிரே வந்த டாரஸ் லாரி, இருசக்கர வாகனத்தில் மோதியதில், அந்த இடத்திலேயே ராஜா உயிரிழந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் விசாரிக் கின்றனர்.

SCROLL FOR NEXT