அரியலூர் நகரில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோயில் கும்பா பிஷேகம் நேற்று நடை பெற்றது.
கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை யாகசாலையிலிருந்து புனிதநீர் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், விநாயகர், திரவுபதி அம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.