கல்வராயன்மலையில் பதுக்கி வைக் கப்பட்டிருந்த கள்ளச்சாராயத்தை அழிக்கும் போலீஸார். 
Regional02

கல்வராயன்மலையில் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு :

செய்திப்பிரிவு

கல்வராயன்மலையில் சட்டவிரோதமாக சாரா யம் காய்ச்சி ஊறலில் வைத்திருந்த கள்ளச் சாராயத்தை கரியாலூர் போலீஸார் அழித்தனர்

கல்வராயன்மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி கரியாலூர் போலீஸார் கல்வராயன்மலைப் பகுதியில் அவ்வப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டு, சட்ட விரோதமாக காய்ச்சப்படும் கள்ளச்சாராயத்தை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர்.

அதன்படி நேற்று முன் தினம் கரியாலூர் காவல்துறையினர் கல்வராயன் மலையில் உள்ள எட்டரைப்பட்டியில் சோதனை நடத்தியபோது, 10 ஊறல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் லிட்டர் கள்ளச் சாராயத்தை கண்டு பிடித்து அழித்தனர்.

352 லிட்டர் சாராயம் பறிமுதல்

இதேபோல் நேற்று கிருமாம்பாக்கம் உதவி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான போலீஸார் முள்ளோடை - பரிக்கல்பட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டதில் சாராய பாக்கெட்டுகள் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 75 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.76 ஆயிரம் என கூறப்படுகிறது.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட உச்சிமேடு பொறையாத்தம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த சின்னத்துரை (40) என்பவரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 352 லிட்டர் சாராயத்தை போலீஸார் கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.

10 ஊறல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் லிட்டர் கள்ளச் சாராயத்தை அழித்தனர்.

SCROLL FOR NEXT