திண்டிவனம் வைரபுரத்தைச் சேர்ந்த நெல் வியாபாரி முருகே சன் (35) என்பவருக்கும், அருகேஉள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 2001-ம் ஆண்டில் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்வ தாக கூறி முருகேசன் பழகியதில் அப்பெண் கருவுற்றார். ஆனால் முருகேசன் அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டார்.
பின்னர் ஊர் முக்கியஸ்தர்க ளிடம் அப்பெண் முறையிட்டதன் பேரில் முருகேசன் திருமணம் செய்தார். அந்தப் பெண்ணுடன் முருகேசன் வாழாமல் வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
விழுப்புரம் மகளிர் நீதிமன்றத் தில் இவ்வழக்கு விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதிசாந்தி இவ்வழக்கில் முருகேசனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். இல்லையெனில் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.