சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வெவ்வேறு இடங்களில் நடத்திய சோதனையில், உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற 74 கிலோ வெள்ளிக் கொலுசு மற்றும் ரூ.21.58 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கந்தம்பட்டியில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில், உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.35 லட்சம் மதிப்புள்ள 74.73 கிலோ வெள்ளிக் கொலுசு 13 கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், செவ்வாய்ப்பேட்டை தாண்டவராயன் நகரைச் சேர்ந்த சந்திரகாந்த் (40) என்பவர் பனங்காட்டு பகுதிக்கு மொத்த விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
சேலம் ஆட்டையாம்பட்டி எஸ்.பாலம் பகுதியில் நடந்த சோதனையின்போது, பெங்களூருவில் இருந்து வந்த காரை சோதனை செய்ததில், பெங்களூருவைச் சேர்ந்த பாலசுரேஷ் என்பவர் கார் வாங்க ஆவணமின்றி ரூ.7.57 லட்சம் கொண்டு வந்தது தெரிந்து பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் கொங்கணாபுரம் மூலப்பாதையில் நடந்த சோதனையில், மேச்சேரியைச் சேர்ந்த சுகுமார் என்பவர் காரில் உரிய ஆவணமின்றி ரூ.65 ஆயிரம் கொண்டு வந்தது தெரிந்து பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக்கொலுசு மற்றும் ரூ.8.22 லட்சத்தை அதிகாரிகள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி, அரூரில்
இதேபோல், வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட குந்தாரப்பள்ளியில் பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தியாகரசனப்பள்ளியைச் சேர்ந்த தினேஷ் என்பவரின் காரை சோதனை செய்தனர். அவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.4 லட்சத்து 29 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆண்டிப்பட்டி பிரிவு சாலையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 800 இருந்தது தெரிந்தது. இருசக்கர வாகனத்தில் வந்தவர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ராமியம்பட்டியைச் சேர்ந்த மனோஜ் (23) என்பதும், அவர், சீட்டு பணம் எடுத்துக் கொண்டு அரூருக்கு நகை வாங்கச் சென்றதும் தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
ஓசூரில் ரூ.2.50 லட்சம்