Regional03

சேலம் கோட்டம் சார்பில் - 50 குளிர்சாதன அரசுப் பேருந்துகள் இயக்கம் :

செய்திப்பிரிவு

சேலம் மற்றும் தருமபுரியில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி உள்பட பல்வேறு நகரங்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 50 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்களில் குளிர்சாதன பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் குளிர்சாதன பேருந்துகள் இயக்க அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் குளிர்சாதன பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை, மதுரை, திருச்சிக்கும், தருமபுரியில் இருந்து சென்னை, கிருஷ்ணகிரி- சென்னை, ஓசூர்- சென்னைக்கும் 50 குளிர்சாதன பேருந்துகள் கடந்த 1-ம் தேதி முதல் இயக்கப்படுகின்றன. குளிர்சாதன பேருந்துகள் இயக்கத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. பேருந்தில் 25 டிகிரி வெப்பநிலை இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு பின்பற்றப்படுகின்றன” என்றனர்.

SCROLL FOR NEXT