சங்ககிரி அருகே விவசாயி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சங்ககிரி அடுத்த மாவடிபாளையம் உப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி சேகர் என்ற ராமசாமி (45). இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்து, 2 ஆண்டுகளில் மனைவி பிரிந்து விட்டார். இதையடுத்து, அவர் பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பால் விற்பனைக்காக சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், அவர் அவரது விளை நிலம் அருகே தலையில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சங்ககிரி இன்ஸ்பெக்டர் (பொ) சண்முக சுந்தரம் தலைமையிலான போலீஸார், ராமசாமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.