Regional03

கொத்தடிமையாக பணிபுரிந்த தம்பதி மீட்பு :

செய்திப்பிரிவு

சேலம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமையாக பணிபுரிந்த தம்பதி மீட்கப்பட்டனர்.

சேலம் அடுத்த பாரப்பட்டி கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் ஓமலூரைச் சேர்ந்த சேகர் மற்றும் அவரது மனைவி வனிதா ஆகியோர் கொத்தடிமையாக பணிபுரிந்து வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது.

இதைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி, சேலம் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தொழிலாளர் ஆய்வாளர் மற்றும் வருவாய்த்துறையினர் பாரப்பட்டி செங்கல் சூளையில் தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு கொத்தடிமையாக சேகர், வனிதா இருப்பது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர். மேலும், அவர்களுக்கு கொத்தடிமை நிவாரண நிதி வழங்கி, அவர்களது மறுவாழ்வுக்கு உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT