சேலம் மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடும் 290 பேருக்கு நேற்று கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தமிழகத்தில் மூன்றாம் கட்டமாக கரோனா தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
நேற்று முதல்நாளில் வாக்குச்சாவடி பணி அலுவலர்கள் 264 பேர் மற்றும் கண்காணிப்பாளர்கள் 26 பேர் என மொத்தம் 290 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனிடையே, சேலம் தெற்கு தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேர்தல் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.