Regional02

வாகன சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் வாகனதணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று காலையில் தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பொறியாளர் தளவாய் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த பகுதியில் வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். காரில் இருந்தவரிடம் ரூ.1.67 லட்சம் ரொக்கம் இருந்தது. அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதையும் அவர் கொண்டுவரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, உதவி தேர்தல்நடத்தும் அலுவலரான வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல வேளாண்மை அதிகாரி சகாயமேரி தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் தூத்துக்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்தகாரை மறித்து சோதனை செய்தபோது, காரில் இருந்தவரிடம் ரூ.63,500 ரொக்கம் இருந்தது.

அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. பணத்தை பறிமுதல் செய்த நிலையான கண்காணிப்பு குழுவினர், அதனை தூத்துக்குடி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத் தனர்.

நாகர்கோவில்

மொபட்டில் சென்ற பெண்ணிடம் சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் ரூ.1,74,500 பணம் இருந்தது. இதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை.

SCROLL FOR NEXT