Regional03

எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடியில் ரூ.883.50, கோவில்பட்டியில் ரூ.882, கழுகுமலையில் ரூ.890.50, கயத்தாறில் ரூ.893.50, எட்டயபுரத்தில் ரூ.882 மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.900.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடியில் ரூ.883.50, வைகுண்டத்தில் ரூ.884 மற்றும் குளத்தூரில் ரூ.884.50 எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.883.50 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே நுகர்வோர் எரிவாயு முகவர்களிடம் இருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டருக்கு (14.2 கிலோ) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT