Regional03

மாணவர் பேரவை தொடக்க விழா :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2020-2021-ம் ஆண்டுக்கான மாணவர் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பா.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். திருநெல்வேலி கால்நடை அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் அ.பழனிச்சாமி மாணவர் பேரவை நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார். பேராசிரியர் சா.ஆதித்தன் மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மாணவர் மா.ராபர்ட் பொதுச் செயலாளராகவும், க.கவுதம் விளையாட்டு செயலாளராகவும், மு.விஷால் இலக்கிய மன்ற செயலாளராகவும், கு.கோபி நாட்டு நலப்பணித்திட்ட செயலாளராகவும், சி.கிருஷ்ணவேணி கல்லூரியின் இதழ் ஆசிரியராகவும், கோ.ஹரிணி அறிவியல் மன்ற செயலாளராகவும், ஜெப்ரின் ஸ்டீவ் இணைச் செயலாளராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

SCROLL FOR NEXT