Regional03

வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி :

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது, வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை எவ்வாறு பார்த்து உறுதி செய்வது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெற்றது.

விவிடி சந்திப்பு அருகேயுள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக் குடி வட்ட வழங்கல் அலுவலர் பொ.வதனாள் தலைமையிலான குழுவினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ளவார்டு அலுவலகத்தில் அந்தபகுதி டெங்கு களப்பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பேருந்து நிலையம், உழவர் சந்தைபோன்ற மக்கள் கூடும் இடங்களிலும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT