தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனையை கண்காணிக்குமாறு பறக்கும் படை அலுவலர்களுக்கு தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திருவண் ணாமலை மாவட்டத்தில் பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், மாவட்ட எல்லைக்குள் முறையற்ற மதுபான விற்பனை, மதுபானம் கடத்தல், தினசரி நடைபெறும் விற்பனையை கண்காணித்தல், மொத்த விற்பனையை தடுத்தல், மதுபானம் தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தல், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் மதுபான கடைகள் செயல்படுவதை கண்காணித்தல் ஆகிய பணியில் ஈடுபட வேண்டும்.
சட்ட விரோத மதுபான விற்பனை தொடர்பான புகார் களை பறக்கும் படை அலுவலர் மற்றும் மாவட்ட கிடங்கு மேலாளர் ரமேஷ் அவர்களின் செல்போன் எண் 94445 86452 மற்றும் அலுவலக எண்–93853 37166 ஆகிய வற்றில் தொடர்பு கொண்டு புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.