Regional02

பரிசுப் பொருட்கள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

காங்கயம் வட்டம் படியூர் அருகே,நிலையான கண்காணிப்புக் குழுவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக பல்லடம் சித்தம்பலம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் ஓட்டி வந்தவாகனத்தை சோதனையிட்டபோது, உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் தேர்தல் நடத்தை விதிகளை மீறி தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரின் புகைப்படங்கள் பதிவிடப்பட்ட 15 கைப்பைகள் கொண்ட பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அதில் ஒரு கம்பளிப் போர்வை, ஒரு சேலை மற்றும் ஒரு சில்வர் தட்டு என ரூ. 5000 மதிப்பிலான பொருட்கள் இருந்தன. காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவற்றை பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளதாக காங்கயம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரா.ரெங்கராஜன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT