திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 44-வது வார்டு டூம்லைட் மைதானம் டிமாண்டி வீதியில் திமுக சார்பில் ஸ்டாலின் உருவப்படம் பொறித்த விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததால், அந்த பதாகைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முயன்றனர். அப்போது, திமுகதெற்கு மாநகரப் பொறுப்பாளர்டிகேடி மு.நாகராஜன் தலைமையில் அங்கு வந்த திமுக நிர்வாகிகள் சிலர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக திமுகவினர்முழக்கங்கள் எழுப்பினர்.இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், போலீஸார் விசாரித்து வருகின்றனர்.