Regional02

மருத்துவர் ஜீவானந்தம் உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி :

செய்திப்பிரிவு

தமிழக பசுமை இயக்கத் தலைவர் வெ.ஜீவானந்தம் (76), உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை அருகே அருகே உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த ஜீவானந்தம் உடலுக்கு இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத்தலைவர் சி.என்.ராஜா, ஈரோடை அமைப்பின் தலைவர் மருத்துவர் சுதாகர், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், காந்தி கிராம பல்கலை முன்னாள் துணைவேந்தர்கள் மார்கண்டன், பழனிதுரை, கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் செ.நல்லசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் திருநாவுக்கரசு,பழங்குடி மக்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன், திராவிடர்கழக அமைப்புச் செயலாளர் த.சண்முகம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர்அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு காவிரிக்கரையோரம் உள்ள ஆத்மா மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதன் பின் நடந்த இரங்கல் கூட்டத்தில், மருத்துவர் ஜீவானந்தம் பெயரில் அறக்கட்டளை தொடங்கி சமூக சேவை பணி களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT