Regional01

தேர்தல் பறக்கும் படை நடவடிக்கையில் இருந்து - வெள்ளிப் பொருட்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை :

செய்திப்பிரிவு

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், வெள்ளிப் பொருட்களை எடுத்துச் செல்ல விலக்கு அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்கத் தலைவர் தேவேந்திரன், செயலாளர் ஆனந்தராஜன் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக் கொலுசு உற்பத்தியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொலுசு தயாரிப்பு பணியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனையில் வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்கள் கொண்டு செல்லும் வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

கொலுசு முழு வடிவம் பெற 30-க்கும் மேற்பட்ட பகுதிகளை உள்ளடக்கினால் மட்டுமே உருவாக்கிட முடியும்.

இவ்வாறு ஒவ்வொரு பணிக்கும் வெவ்வேறு இடங்களுக்கு கொலுசு பாகங்களை எடுத்துச் செல்லும் போது, அதற்கான ரசீதுகளை உடன் எடுத்துச் செல்ல இயலாது. எனவே, வெள்ளிப் பொருட்கள் கொண்டு செல்வோர் அடையாள அட்டை வைத்திருந்தால் வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT