திருச்செங்கோட்டில் தமிழ்நாடு ரிக் உரிமையாளர் சம்மேளனத்தின் கூட்டம் நடைபெற்றது. சம்மேளனத் தலைவர் மற்றும் திருச்செங் கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். தென்மண்டல விவசாய ரிக் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பாரி கணேசன் முன்னிலை வகித்தார்.
டீசல் விலை உயர்ந்து வருவதால் போர்வெல் தொழில் நலிவடைந்து வருகிறது. இதனால் போர் வெல் போட கட்டணம் நிர்ணயம் செய்ய இயலவில்லை. இதனை தவிர்க்கும் விதமாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சம்மேளன கூட்டத்தை கூட்டி, டீசல் விலைக்கு ஏற்ப போர்வெல் கட்டணத்தை நிர்ணயம் செய்யலாம், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கூட்டத்தில் சம்மேளனதலைவர் கந்தசாமி பேசுகையில், விவசாய பயன்பாட்டுக்காக போர்வெல் வாகனத்தை இயக்கி வருகிறோம். எனவே போர்வெல் வாகனங்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும், என்றார்.