தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில், தேசிய அறிவியல் தினத்தையொட்டி சிறந்த பெண் விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கும் விழா அண் மையில் இணையவழியில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்ப துறை செயலாளர் டாக்டர் ரேணு ஸ்வரூப் சிறப்பு விருந்தி னராக பங்கேற்றுப் பேசினார்.
சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.வைத்தியசுப்பிரமணி யம் வரவேற்றுப் பேசினார்.
இதில் டெல்லி ஐஐடி முன்னாள் பேராசிரியர் அஜோய் கதக்குக்கு, சாஸ்த்ரா ஜி.என்.ராமச்சந்திரன் விருது, டெல்லி தேசிய தாவர மரபணு நிறுவனத்தைச் சேர்ந்த கீதாஞ்சலி யாதவுக்கு சாஸ்த்ரா ஒபைத் சித்திக் விருது வழங்கப்பட்டது.
மேலும், வேதியியல், பொருள் அறிவியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக டெல்லி ஐஐடி பேராசிரியர்கள் ஏ.கே.கங்குலி, பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவன பேராசிரியர் ஜி.முகேஷ் ஆகியோருக்கு சாஸ்த்ரா - சி.என்.ஆர்.ராவ் விருதுடன், தலா ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு, சான்றிதழ் அளிக்கப்பட்டது.
முனைவர் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு சாஸ்த்ரா சந்திரசேகர் அமைப்பு இணைந்து சரோஜ் சந்திரசேகர் விருது வழங்கி வருகின்றன.
நிகழாண்டு கான்பூர் ஐஐடியை சேர்ந்த மது சதுர்வேதி நிஷாந்த்மன்சர், ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சயன்தாசி சின்ஹா ஆகியோருக்கு இவ்விரு தும், தலா ஒரு லட்சமும் வழங்கப் பட்டது.
மேலும் சாஸ்த்ராவைச் சேர்ந்த ரம்யா, கான்பூர் ஐஐடியை சேர்ந்த அகன்ஷாஓங்கரை கவுர வப்படுத்தும் வகையில் தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசும், காஷ்மீர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரூஹிமொஹிதீனுக்கு சிறப்பு பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்க பட்டது.
பின்னர் சாஸ்த்ராவில் உயிரி தொழில்நுட்பத் துறையின் ரூ.7 கோடி நிதி உதவியுடன் தொழில்நுட்ப வணிக வளர்ப் பகமான அப்லெஸ்ட் என்கிற அமைப்பை ரேணு ஸ்வரூப் திறந்துவைத்தார். நிறைவாக பல்கலைக்கழக முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாட்டு) எஸ்.சுவாமிநாதன் நன்றி கூறினார்.