தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அலுவலர்கள், பொதுமக்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத் தில் உள்ள காப்பறையிலிருந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நேற்று அனுப்பிவைக்கப் பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னி லையில், இந்த இயந்திரங்களை நேற்று அனுப்பி வைத்த ஆட்சியர் ம.கோவிந்தராவ், பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியது:
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளிலும் மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில், பயிற்சி அளிப்பதற்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத் தில் சரிபார்ப்பு முடிந்த பிறகு, 4,986 வாக்குப் பதிவு இயந்திரங் களும், 3,592 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 3,922 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் நல்ல நிலை யில் உள்ளன. இவற்றில் 5 சதவீத இயந்திரங்கள் பயிற்சிக் காக அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் வழங்கப் படுகின்றன. பொதுமக்களில் யாருக்காவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதில் சந்தேகம் இருந்தால், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவ லகத்தை அணுகலாம். அவர் களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்படும்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, அனைத்து தொகுதி களிலுள்ள தலைவர்களின் சிலைகளில் 90 சதவீதம் மறைக்கப் பட்டுள்ளன.
இதுதொடர்பாக, ஏதேனும் புகார் வந்தால், கள அலுவலர்கள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்கேயாவது சந்தேகத்துக்குரிய வகையிலும், பெரிய அளவிலும் பண பரிவர்த்தனை நடந்தால், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கலாம். மாவட்டத்தில் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் இதுவரை ரூ.8.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது, கோட்டாட்சியர் எம்.வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.