வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க திருநெல்வேலியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் விழிப்புணர்வு படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த வாகனத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
Regional01

நெல்லையில் மது கடத்தலை தடுக்க சிறப்பு படை : புகார் அளிக்க செல்போன் எண்கள் வெளியீடு

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் மது கடத்தலை தடுக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் வே.விஷ்ணு கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபானங்கள் கடத்தலை தடுக்க ஒருங்கிணைப்பு மற்றும் பறக்கும்படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வட்டாட்சியர் மற்றும் மதுபான கிடங்கு மேலாளர் எஸ்.பொன்னையா (கைபேசி எண் 8838268411) ஒருங்கிணைப்பு அலுவலராக செயல்படுவார். பறக்கும்படையில் உதவி மேலாளர் ஐ. சத்யா (கைபேசி எண் 9840854703), கே. பேச்சிமுத்து (கைபேசி எண் 9442330817), ஆர்.சுப்பிரமணியன் (கைபேசி எண் 9344964038), என்.சிவசாமி (கைபேசி எண் 9566602545), சி.ஆதித்தன் (கைபேசி எண் 9965331529) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான புகார்களை அலுவலர்களின் கைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என்றார்.

இதனிடையே மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பறக்கும்படையினர் நடத்திய சோதனைகளில் சட்ட விரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட 29 மதுபாட்டில்கள், 64 வேட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

படக்காட்சி வாகனம்

மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், துணை ஆட்சியர் (பயிற்சி) மகாலெட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி. நவாஸ்கான் உடனிருந்தனர்.

கொடி அணிவகுப்பு

திருநெல்வேலி டவுன் நான்கு ரத வீதிகளிலும் போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

SCROLL FOR NEXT