கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கோமுகி அணை. 
கள்ளக்குறிச்சி

80 - கள்ளக்குறிச்சி (தனி)

செய்திப்பிரிவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
செந்தில்குமார் அதிமுக
கே.ஐ.மணிரத்னம் (காங்கிரஸ்) திமுக
என்.விஜயகுமார் அமமுக
எம்.அய்யாசாமி மக்கள் நீதி மய்யம்
தி.திராவிடமுத்தமிழ்ச்செல்வி நாம் தமிழர் கட்சி

கள்ளக்குறிச்சி தனித்தொகுதி கள்ளக்குறிச்சி விவசாயத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்ட மாவட்டம். திரும்பும் பக்கமல்லாம் கண்ணுக்கு பசுமையளிக்கும் நெல் வயலும், கரும்புகள் மரவள்ளிக் கிழங்குகளும், பருத்தி என பல்வேறு விவசாய பயிர்கள் வளர்ந்து பசுமை மட்டுமே கண்ணுக்கு விருந்தாக வைத்துக் கொண்டிருப்பது இந்த தொகுதியின் தனி சிறப்பு.

கல்லைக்குறிச்சி என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட கள்ளக்குறிச்சி பகுதியில் சோழ,பாண்டிய மற்றும் விஜயநகர பேரரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். அப்போது கட்டப்பட்ட பிரம்மாண்டமான பழமைவாய்ந்த கோவில்களை உள்ளடக்கியது.

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி 1952- ம் ஆண்டு இரட்டை முறை வாக்கெடுப்பில் பொது தொகுதியாக தொடங்கப்பட்டது. 1962-ல் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. பின்னர் 1967-ல் கள்ளக்குறிச்சி பொது தொகுதியாக மாறியது அதன்பின் 1977-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி தொகுதி நீக்கப்பட்டு சின்னசேலம் தொகுதியாக மாற்றப்பட்டது. மீண்டும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதி மறு சீரமைப்பில் கள்ளக்குறிச்சி தனி தொகுதியாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு 2011 முதல் கள்ளக்குறிச்சி தொகுதியாக தொடர்கின்றது.

கள்ளக்குறிச்சி தொகுதியில் கள்ளக்குறிச்சி நகராட்சி, தியாகதுருகம் பேரூராட்சி, கள்ளக்குறிச்சி ஒன்றியத்தின் 25 ஊராட்சிகள், சின்னசேலம் ஒன்றியத்தின் 37 ஊராட்சிகள், தியாகதுருகம் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 2 ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மொத்தத்தில் நகராட்சி வார்டுகள் 21, பேரூராட்சி வார்டுகள் 15, மற்றும் 102 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியது.கள்ளக்குறிச்சி தொகுதி தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி தனித்தொகுதியில் 330 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.

சிறுவங்கூர் வரதராஜ பெருமாள் கோவில் சுவற்றில்..கல்லக்குறிச்சி என்று கல்வெட்டுள்ளது. கோமுகி மணிமுக்தா மயூரா என ஆறுகள் சங்கமிக்கும் இடமாக இருந்தாலும் இதன் பிறப்பிடம் என்னவோ கல்வராயன் மலை தான். நெல், கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், மரவள்ளி, மணிலா விளைந்தாலும், நெல்லை மதிப்புக் கூட்டும் அரிசி ஆலைகள் கொண்ட கள்ளக்குறிச்சியில் விவசாய தொழிலாளர்களும் அரிசி ஆலை தொழிலாளர்களுமே அதிகமாக இருக்கின்றனர்.

தொகுதி பிரச்சினைகள்

கடந்த 2019-ம் ஆண்டு கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக்க கொண்டு புதிய மாவட்டமாக உருவெடுத்த போதிலும், கள்ளக்குறிச்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

விவசாய பூமியானாலும், குடிநீருக்கு கடும் தட்டுப்பாடும் நிலவுவதை எவரும் மறுக்கமுடியாது, கள்ளக்குறிச்சி ரயில் நிலையப் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மாவட்டத் தலைநகருக்கு ரயில் போக்குவரத்து வசதி இல்லை.

2016 தேர்தலின் போது கள்ளக்குறிச்சி சட்டமன்றத் (தனி) தொகுதியின் வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகள் விவரம் அதிமுகபிரபு- 90108 வாக்குகள் பெற்று தொகுதியை கைப்பற்றினார்.

2020 - ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

141681

பெண்

143953

மூன்றாம் பாலினத்தவர்

53

மொத்த வாக்காளர்கள்

285690

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

எ.பிரபு

அதிமுக

2

பி.காமராஜ்

தி.மு.க

3

பி.ராமமூர்த்தி

விசிக

4

ஆர்.செந்தமிழ் செல்வி

பாமக

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1951

இளைய பிள்ளை

சுயேச்சை

25799

1957

நடராச உடையார்

சுயேச்சை

25020

1962

டி. சின்னசாமி

திமுக

25084

1967

டி. கே. நாயுடு

திமுக

39175

1971

டி. கேசவலு

திமுக

38513

ஆண்டு

2ம் இடம்பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1951

ஆனந்தன்

காங்கிரஸ்

24874

1957

எம். ஆனந்தன்

சுயேச்சை

24099

1962

பி. வேதமாணிக்கம்

காங்கிரஸ்

18837

1967

வி. டி. இளைய பிள்ளை

காங்கிரஸ்

28642

1971

எசு. சிவராமன்

நிறுவன காங்கிரஸ்

34374

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K. அழகுவேலு

அ.தி.மு.க

111249

2

A.C. பவராசு

வி.சி.கே

51251

3

K. நடேசன்

சுயேச்சை

4031

4

K. அறிவுக்கரசு

ஐ.ஜே.கே

3246

5

M. செந்தில் குமார்

சுயேச்சை

2425

6

V. அனாந்தி

சுயேச்சை

2246

7

M. தினேஷ்

பி.எஸ்.பி

1481

8

N. ராஜேஷ்

பி.ஜே.பி

1192

9

M. குருசாமி

சுயேச்சை

1025

10

A. அம்சவள்ளி

எல்.ஜே.பி

760

178906

SCROLL FOR NEXT