2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| காமராஜ் | அதிமுக |
| ஜோதிராமன் | திமுக |
| அக்ரி என்.இராமச்சந்திரன் | அமமுக |
| கணேசன் | மக்கள் நீதி மய்யம் |
| ச.பாத்திமா பர்ஹானா | நாம் தமிழர் கட்சி |
நன்னிலம், குடவாசல், வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் முழுமையாகவும் கொரடாச்சேரி ஒன்றியத்தில் ஒரு பகுதியும், நன்னிலம், பேரளம், குடவாசல், வலங்கைமான் ஆகிய நான்கு பேரூராட்சிகளும் இத்தொகுதியில் அடக்கம்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றதொகுதி. 1,35283 ஆண் வாக்காளர்களும், 1,36159 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 24 வாக்காளர்களையும் சேர்த்து 2,71,466 பேர் வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் வெள்ளாளர், ஆதிதிராவிடர்கள், முக்குலத்தோர், இஸ்லாமியர்கள்,உடையார், வன்னியர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். தமிழகத்திலேயே சரஸ்வதிக்கென தனிக்கோயில் அமைந்துள்ள கூத்தனூர், ஸ்ரீலலிதாஸகஸ்ர நாமம் பாடல்கள் முதன்முதலில் பாடப்பட்ட தலம் என கூறப்படும் ஸ்ரீலலிதாம்பிகை கோயில் அமைந்துள்ள திருமெய்ச்சூர் இத்தொகுதிக்கு பெருமை சேர்க்கின்றன.
கல்லணையில் இருந்து பிரியும் காவிரி மற்றும் வெண்ணாறு ஆகிய ஆறுகள் மூலம் நீர்பாசனம் செய்யப்படுகிறது.
நன்னிலம் தொகுதியில் ஆண்டுக்கு 20 லட்சம்மெட்ரிக் டன் வைக்கோல் தயாராகிறது. மேலும் மூங்கில் வளர்ப்பும் குறிப்பிடத் தகுந்த அளவில் உள்ளது. இவைகளை பயன்படுத்தி பேப்பர் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கை இதுவரை ஏற்கப்படாமலேயே உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் ஓடுகின்ற 23 ஆறுகளில் பெரும்பாலான ஆறுகள் இத்தொகுதியின் வழியாக செல்கிறது. இந்த ஆறுகளில் ஓடும் தண்ணீர் கடலுக்கு சென்று கலந்து விடுகிறது, இதனை தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என்பதும் தொகுதிமக்களின் ஏற்பாடாகவுள்ளது.
1952 லேயே உருவான நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக. காங்கிரஸ் கட்சிகள்தலா 4 முறையும், அதிமுக மூன்றுமுறையும் அதிமுக ஆதரவுடன் தமாக, இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த செ.கு.தமிழரசன், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி தலாஒரு முறையும்வெற்றி பெற்றுள்ளன. தற்போது அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்ஆர்.காமராஜ் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எஸ்எம்பி. துரைவேலனைவிட 21276 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார். கடந்த தேர்தலில் அதிமுக ஆர்.காமராஜ் பெற்ற வாக்குகள் 100918, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துரைவேலன் பெற்ற வாக்குகள் 79642 என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
நன்னிலம் தாலுகா
வலங்கைமான் தாலுகா
குடவாசல் தாலுக்கா (பகுதி)
பரவாக்கரை,வயலூர், வடமட்டம், அன்னியூர், செருகுடி, திருப்பாம்பரம், சுரைக்காயூர், ஆலாத்தூர், கிள்ளியூர், வடுகக்குடி, விளாகம், திருவிழிமிழலை, வெள்ளை அதம்பர், தேத்தியூர், மணவாளநல்லூர், மருத்துவக்குடி, கூந்தலூர், புதுக்குடி, கண்டிரமாணிக்கம், பிரதாபராமபுரம், மேலராமன்சேத்தி, சீத்தக்காமங்கலம், சேத்தினிபுரம், விக்கிரபாண்டியம், புளியஞ்சேரி, பருத்தியூர், சித்தாடி, அடிப்பூலியூர், செருகளத்தூர், வடவேர், திருவிடைச்சேரி, நாரணமங்கலம், நெடுஞ்சேரி, நெய்குப்பை, செம்மங்குடி, பெரும்பன்னையூர், சேங்காளிபுரம், பெருமங்கலம், அன்னவாசல், மணப்பரவை, ஆளடிகருப்பூர், மேலபளையூர், திருக்குடி, மஞ்சக்குடி, புதுக்குடி மற்றும் சிமிலி கிராமங்கள்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,35,283 |
| பெண் | 1,36,159 |
| மூன்றாம் பாலினத்தவர் | 24 |
| மொத்த வாக்காளர்கள் | 2,71,466 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | ஆர். காமராஜ் | அதிமுக |
| 2 | எஸ்எம்பி. துரைவேலன் | காங்கிரஸ் |
| 3 | ஞா.சுந்தரமூர்த்தி | மார்க்சிஸ்ட் |
| 4 | இ.இளவரசன் | பாமக |
| 5 | ஆர்.சரவணன் | ஐஜேகே |
| 6 | செ.அன்புசெல்வம் | நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
| 2011 | காமராஜ்.k | அதிமுக |
| 2006 | பத்மாவதி | இ.கம்யூ |
| 2001 | C.K.தமிழரசன் | தமாகா |
| 1996 | பத்மா | தமாகா |
| 1991 | K.கோபால் | அதிமுக |
| 1989 | M.மணிமாறன் | திமுக |
| 1984 | M.மணிமாறன் | திமுக |
| 1980 | A.கலையரசன் | அதிமுக |
| 1977 | M.மணிமாறன் | திமுக |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | P. பத்மாவதி | சி.பி.ஐ | 65614 |
| 2 | K. அறிவானந்தம் | அ.தி.மு.க | 54048 |
| 3 | R. ராஜேந்திரன் | தே.மு.தி.க | 4989 |
| 4 | S. ராஜேந்திரன் | சுயேச்சை | 1483 |
| 5 | R. சூரியமூர்த்தி | பாஜக | 1377 |
| 127511 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | R. காமராஜ் | அ.தி.மு.க | 92071 |
| 2 | R. இளங்கோவன் | தி.மு.க | 81667 |
| 3 | G. கணேசன் | ஐஜேகே | 2835 |
| 4 | T. இமானுவேல் | பகுஜன் சமாஜ் கட்சி | 1247 |
| 5 | K.N. பனசைரங்கன் | சுயேச்சை | 1211 |
| 6 | A. சேகர் | சுயேச்சை | 647 |
| 7 | G. சுப்ரமணியன் | சுயேச்சை | 587 |
| 8 | V. சிவகுமார் | சுயேச்சை | 419 |
| 180684 |