2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| க.பாண்டியராஜன் | அதிமுக |
| சா.மு.நாசர் | திமுக |
| நா.மு.சங்கர் | அமமுக |
| உதயகுமார் | மக்கள் நீதி மய்யம் |
| கோ.விஜயலட்சுமி | நாம் தமிழர் கட்சி |
ஆவடி சட்டப்பேரவை தொகுதி, முன்பு பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. தொகுதி மறுசீரமைப்பில், கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட இத்தொகுதியில் நடந்த இரு தேர்தல்களில் வென்றவர்களில், ஒருவர் அமைச்சராக இருந்தவர், மற்றொருவர் அமைச்சராக இருக்கிறார்.
1955-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு ஆவடியில்தான் நடந்தது. அதில், சோஷலிச சமுதாயத்தை அமைப்பதே நமது லட்சியம் என்ற தீர்மானத்தை ஜவஹர்லால் நேரு உருவாக்கி நிறைவேறச் செய்தார்.
ஆவடி தொகுதியில், கடந்த நவம்பர் (2020) 16-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி, 2 லட்சத்து 11 ஆயிரத்து 448 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 13 ஆயிரத்து 644 பெண் வாக்காளர்கள், 92 இதர வாக்காளர்கள் என மொத்தம் 4 லட்சத்து 25 ஆயிரத்து 184 வாக்காளர்கள் உள்ளனர்.
இத்தொகுதியில் ராணுவ தளவாடங்களான பீரங்கிகளை தயாரிக்கும் திண்ஊர்த்தி தொழிற்சாலை, ராணுவ தளவாடங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ராணுவ வீரர்களுக்கான ஆடைகள் தயாரிக்கும் படை உடை தொழிற்சாலை அமைந்துள்ளன.
மேலும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, விமானப்படை, மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியவற்றின் பயிற்சி மையங்கள் அமைந்துள்ளன.இதனால், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆவடி தொகுதியில் வசித்துவருவதால், இத்தொகுதியை மினி பாரதவிலாஸ் எனக் கூறலாம்.
இத்தொகுதியில் பூர்வீகமாக வசித்து வருபவர்களில் தெலுங்கு மொழி பேசும் நாயுடு, முதலியார்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்டோர் அதிகளவில் உள்ளனர்.
பாடி முதல் திருநின்றவூர் வரை சி.டி.எச். சாலை விரிவாக்கப் பணி 7 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் இருப்பது, ஆவடி மாநகராட்சி பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் இன்னும் முடிவுக்கு வராதது உள்ளிட்ட பிரச்சினைகள் அணிவகுத்து நிற்கின்றன.
இத்தொகுதியில், கடந்த 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த இரு தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதில், 2011 தேர்தலில், அதிமுக வேட்பாளரான( முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்) அப்துல்ரஹீம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 102 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாமோதரன் 66 ஆயிரத்து 864 வாக்குகள் பெற்று, தோல்வியடைந்தார். 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளரான( தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்) க.பாண்டியராஜன் ஒரு லட்சத்து, 8 ஆயிரத்து,064 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சா.மு.நாசர் ஒரு லட்சத்து, 6 ஆயிரத்து, 669 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 2,11,448 |
| பெண் | 2,13,644 |
| மூன்றாம் பாலினித்தவர் | 92 |
| மொத்த வாக்காளர்கள் | 4, 25,184 |
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | க.பாண்டியராஜன் | அதிமுக |
| 2 | சா.மு.நாசர் | திமுக |
| 3 | ஆர்.அந்திரிதாஸ் | மதிமுக |
| 4 | ந.ஆனந்தகிருஷ்ணன் | பாமக |
| 5 | ஜெ.லோகநாதன் | பாஜக |
| 6 | சே.நல்லதம்பி | நாம் தமிழர் |
தொகுதி எல்லைகள்
ஆவடி நகராட்சி, திருநின்றவூர் பேரூராட்சி, திருவேற்காடு பேரூராட்சி மற்றும் பூந்தமல்லி வட்டம் நடுகுத்தகை, நெமிலிச்சேரி மற்றும் கருணாகரச்சேரி கிராமங்கள்
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் | |
| 1 | அப்துல் ரஹீம் | அதிமுக | 110102 | |
| 2 | தாமோதரன் | காங்கிரஸ் | 66864 | |
| 3 | ஜெயராமன் | சுயேச்சை | 10460 | |
| 4 | லோகநாதன்.ஜி. | பிஜேபி | 3785 | |
| 5 | சத்யமூர்த்தி | பி எஸ் பி | 1656 | |
| 6 | பக்தவச்சலு | ஜே எம் எம் | 1336 | |
| 7 | ஜெயராமு | சுயேச்சை | 1114 | |
| 8 | ஜெயராமன் | சுயேச்சை | 828 | |
| 9 | ரவிஆறுமுகம் | சுயேச்சை | 585 | |
| 10 | முல்லைதமிழன் | சுயேச்சை | 540 | |
| 11 | ஷா நவாஸ் கான் | சுயேச்சை | 471 | |
| 12 | பரமானந்தம் | எல் எஸ் பி | 416 | |
| 13 | ராகுலன் | சுயேச்சை | 391 | |
| 14 | கோவிந்தராஜ் | சுயேச்சை | 290 | |
| 15 | அமராவதி | சுயேச்சை | 277 | |
| 16 | கோதண்டன் | சுயேச்சை | 157 | |
| 17 | கமலேஷ் | சுயேச்சை | 148 | |
| 18 | பிரபு | சுயேச்சை | 105 | |
| 199538 | ||||