2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| ராஜமன்னார் (பாமக) | அதிமுக |
| ஆ.கிருஷ்ணசாமி | திமுக |
| ஏழுமலை | அமமுக |
| ரேவதி நாகராஜன் | மக்கள் நீதி மய்யம் |
| வி.மணிமேகலை | நாம் தமிழர் கட்சி |
திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையை ஒட்டியுள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்றான பூந்தமல்லி தொகுதியில் பூந்தமல்லி வட்டத்தின் பெரும்பகுதிகள், திருவள்ளூர் வட்டத்தின் ஒரு பகுதி அடங்கியுள்ளன. இத்தொகுதியின் எல்லைகளாக ஆவடி, மதுரவாயல், மாதவரம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகள் உள்ளன.
பூந்தமல்லி தொகுதியில், கடந்த நவம்பர் (2020) 16-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி, ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 194 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 220 பெண் வாக்காளர்கள், 50 இதர வாக்காளர்கள் என மொத்தம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 464 வாக்காளர்கள் உள்ளனர்.
பிரசித்திப் பெற்ற பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில் மற்றும் திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோயில்கள், வெடி குண்டு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் மற்றும் திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் தனியார் மதுபான தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.
நெல் மற்றும் பூக்கள், காய்கறி சாகுபடி என தொடரும் விவசாயம் பூந்தமல்லி தொகுதியின் பிரதான தொழிலாக விளங்குகிறது.இத்தொகுதியில், தலித், வன்னியர் சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர்.
சென்னையிலிருந்து, வடமாவட்டங்கள், கர்நாடகா, ஆந்திர மாநில பகுதிகளுக்கு செல்லும் வழியில் உள்ள பூந்தமல்லி பஸ் நிலையப் பகுதியில் எந்நேரமும் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவேண்டும், பூந்தமல்லி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தவேண்டும், பூந்தமல்லியில் அரசு கலைக் கல்லூரி, தாமரைப்பாக்கத்தில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட காலமாக வைத்து வருகின்றனர் பூந்தமல்லி தொகுதி வாசிகள்.
இத்தொகுதியில், கடந்த 1977 முதல் 2019 வரை நடந்த 11 தேர்தல்களில் (ஒரு இடைத்தேர்தல் உட்பட) 4 முறை திமுகவும், 3 முறை காங்கிரஸும், 2 முறை அதிமுகவும், ஒரு தாமாகவும், ஒரு முறை பாமகவும் வெற்றி பெற்றுள்ளன. இதில், 2019-ல் நடந்த இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 984 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜி. வைத்தியநாதன் 76 ஆயிரத்து, 355 வாக்குகள் பெற்று, தோல்வியடைந்தார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,70,194 |
| பெண் | 1,75,220 |
| மூன்றாம் பாலினித்தவர் | 50 |
| மொத்த வாக்காளர்கள் | 3,45,464 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | டி.எ.ஏழுமலை | அதிமுக |
| 2 | இ.பரந்தாமன் | திமுக அணி |
| 3 | து.கந்தன் | மதிமுக |
| 4 | சி.பார்த்தசாரதி | பாமக |
| 5 | அ.அமர்நாத் | பாஜக |
| 6 | அ.பொன்னரசு | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
அரும்பாக்கம், திருக்கனன்சேரி, வீளாம்பாக்கம், கெருகம்பூண்டி, செம்பேடு, வெங்கல், வெள்ளியூர், அம்மணம்பாக்கம், அகரம், சேத்துபாக்கம், குருவாயல், அரக்கம்பட்டு, சிங்கிலிகுப்பம், ஆயலசேரி, புதுக்குப்பம், கோடுவெளி, காரணை, மாகரல், தாமரைப்பாக்கம், மேலக்கொண்டையூர், வதட்டூர், கரிக்கலவாக்கம், விஷ்ணுவாக்கம், கீழனூர், மேலானூர், ஒத்திக்காடு, புன்னப்பாக்கம், புல்லரம்பாக்கம், ஈக்காடு, கல்யாண குப்பம், சிட்டத்தூர், பேரத்தூர், அயலூர், புன்னப்பட்டு, சிவன்வாயல், நல்லாங்காவனூர், புலியூர், பாக்கம், வேப்பம்பட்டு, அயத்தூர், சிறுகளத்தூர், தொட்டிக்கலை, கிளாம்பாக்கம், தண்டலம், தண்ணீர்குளம், காக்களூர், புட்லூர், தொழுர், சிறுகடல், செவ்வாப்பேட்டை, பெரும்பாள்பட்டு, வேப்பம்பட்டு, திருவூர் மற்றும் அரண்வாயல் கிராமங்கள்.
பூந்தமல்லி வட்டம்
கூடப்பாக்கம், வரதராஜபுரம், வெள்ளவேடு, நேமம், நொச்சி மேடு, மெய்யூர், படூர், அகரமேல், நாசரத் பேட்டை, கண்ணப்பாளையம், மேல்பாக்கம், சொரன்சேரி, அமுதூர்மேடு, அக்ரஹாரமேல், திருநின்றவூர், கொரட்டூர், வயலாநல்லூர், கோலப்பஞ்சேரி, பாணவேடுதோட்டம், பிடாரிதாங்கல், பாரிவாக்கம், சென்னீர்குப்பம், கொரட்டூர், கீழ்மணம்பேடு, காட்டுப்பாக்கம் மற்றும் கோபரசநல்லூர் கிராமங்கள்.
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
பூந்தமல்லி (தனி), தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1977 - 2011)
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
| 1977 | டி. இராசரத்தினம் | திமுக | 26552 | 36.49 |
| 1980 | இராசரத்தினம் | திமுக | 38018 | 48.83 |
| 1984 | ஜி. அனந்தகிருஷ்ணன் | காங்கிரசு | 55129 | 55.97 |
| 1989 | டி. ஆர். மாசிலாமணி | திமுக | 58640 | 48.11 |
| 1991 | டி. சுதர்சனம் | காங்கிரசு | 68392 | 55.5 |
| 1996 | டி. சுதர்சனம் | தமாகா | 75731 | 53.2 |
| 2001 | எஸ். சண்முகம் | பாமக | 62220 | 37.51 |
| 2006 | டி. சுதர்சனம் | காங்கிரசு | 98920 | --- |
| 2011 | இரா. மணிமாறன் | அதிமுக | 99097 | --- |
| ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
| 1977 | இரா. குலசேகரன் | அதிமுக | 21659 | 29.76 |
| 1980 | சம்பந்தன் | காந்தி காமராசு தேசிய காங்கிரசு | 26930 | 34.59 |
| 1984 | டி. இராசரத்தினம் | திமுக | 40562 | 41.18 |
| 1989 | ஜி. அனந்தகிருஷ்ணன் | காங்கிரசு | 29345 | 24.07 |
| 1991 | டி. இராசரத்தினம் | திமுக | 44240 | 35.9 |
| 1996 | பி. கிருஷ்ணமூர்த்தி | காங்கிரசு | 25220 | 17.72 |
| 2001 | எஸ். செழியன் | திமுக | 59904 | 36.12 |
| 2006 | ஆர். செங்குட்டுவன் | மதிமுக | 83590 | |
| 2011 | காஞ்சி ஜி.வி.மதியழகன் | காங்கிரசு | 57678 | --- |
2006 – தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | சுதர்சனம்.டி | காங்கிரஸ் | 98920 |
| 2 | செங்குட்டுவன் | மதிமுக | 83590 |
| 3 | சந்திரசேகர்.ஜி | தேமுதிக | 15711 |
| 4 | மனோகரன் | பிஜேபி | 2062 |
| 5 | ஜோதிமணி | சுயேச்சை | 1432 |
| 6 | ஜெயகுமார் | பி எஸ் பி | 553 |
| 7 | ராயர் | சுயேச்சை | 444 |
| 8 | வெங்கடேசன் | சுயேச்சை | 431 |
| 9 | சரவணன் | சுயேச்சை | 320 |
| 10 | பார்த்தசாரதி | சுயேச்சை | 203 |
| 11 | வாசுதேவன் | சுயேச்சை | 174 |
| 12 | மாசிலாமணி | சுயேச்சை | 151 |
| 203991 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | மணிமாறன் | அதிமுக | 99097 |
| 2 | காஞ்சி ஜி.வி.மதியழகன் | காங்கிரஸ் | 57678 |
| 3 | ஜெகன்மூர்த்தி.எம் | பு பா | 21118 |
| 4 | முரளி.கே | சுயேச்சை | 2022 |
| 5 | தேன்மதி | ஐ.ஜே.கே | 1616 |