2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| அலெக்சாண்டர் | அதிமுக |
| ஜோசப் சாமுவேல் | திமுக |
| வேதாச்சலம் | அமமுக |
| எஸ்.வைதீஷ்வரன் | மக்கள் நீதி மய்யம் |
| இரா.அன்புத்தென்னரசன் | நாம் தமிழர் கட்சி |
தற்போது சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் சட்டப்பேரவை தொகுதி, தொகுதி மறுசீரமைப்பில் கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலின் போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு, உருவாக்கப்பட்டது. இத்தொகுதியின் எல்லைகளாக, வடக்கில் மாதவரம், தெற்கில் மதுரவாயல், கிழக்கில் அண்ணா நகர், வில்லிவாக்கம் மேற்கில் ஆவடி ஆகிய தொகுதிகள் உள்ளன.
அம்பத்தூர் தொகுதியில், கடந்த நவம்பர் (2020) 16-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி, ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 106 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 712 பெண் வாக்காளர்கள், 94 இதர வாக்காளர்கள் என மொத்தம் 3 லட்சத்து 67 ஆயிரத்து 912 வாக்காளர்கள் உள்ளனர்.
அம்பத்தூர், கொரட்டூர் ஆகிய ஏரிகளை கொண்ட இத்தொகுதியில் ஆசியாவின் மிகப் பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்றான அம்பத்தூர் தொழிற்பேட்டை, சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலை, வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.
20 ஆண்டுகளுக்கு மேலாக நிறைவடையாத பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டம், அம்பத்தூர், சி.டி.எச். சாலையில் விரிவுபடுத்தப்படாத ரயில்வே மேம்பாலம், ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள கொரட்டூர் ஏரியின் வரத்துக்கால்வாய்கள் தொகுதியின் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.
இத்தொகுதியில், கடந்த 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த இரு தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதில், 2011 தேர்தலில், அதிமுக வேட்பாளர் எஸ்.வேதாச்சலம் 99 ஆயிரத்து 330 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி.ரங்கநாதன் 76 ஆயிரத்து 613 வாக்குகள் பெற்று, தோல்வியடைந்தார்.
2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் வீ.அலெக்சாண்டர் 94 ஆயிரத்து,375 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அசன்மவுலானா 76 ஆயிரத்து, 877 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,84,106 |
| பெண் | 1,83,712 |
| மூன்றாம் பாலினத்தவர் | 94 |
| மொத்த வாக்காளர்கள் | 3, 67,912 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | வீ.அலெக்சாண்டர் | அதிமுக |
| 2 | அசன் மெளலானா | காங்கிரஸ் |
| 3 | ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் | தேமுதிக |
| 4 | கே.என்.சேகர் | பாமக |
| 5 | ச.தேவராஜன் | (இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்- பாஜக) |
| 6 | ரா.அன்புதென்னரசன் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கும் பகுதிகள்
அம்பத்தூர் நகராட்சி வார்டு எண் 1 முதல் 34 வரை மற்றும் 37 முதல் 51 வரை
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - சட்டமன்ற தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | எஸ்.வேதாச்சலம் | அதிமுக | 99330 |
| 2 | பி.ரங்கநாதன் | திமுக | 76613 |
| 3 | ஜெயச்சந்திரன் | பிஜேபி | 3912 |
| 4 | தேவராஜன் | ஜேஎம்எம் | 1128 |
| 5 | முஹம்மது | பி எஸ் பி | 962 |
| 6 | ஜெகதீஸ்வரன் | எல்எஸ்பி | 905 |
| 7 | புவனேஸ்வரி | ஐ ஜே கே | 905 |
| 8 | லோகேஷ் | சுயேச்சை | 608 |
| 9 | பழனிவேல் | சி பி ஐ (எம் எல்) | 477 |
| 10 | எழுமலை | சுயேச்சை | 461 |
| 11 | ராஜேந்திரன் | சுயேச்சை | 261 |
| 12 | பாலாஜி | சுயேச்சை | 201 |
| 13 | லோகுபாபு | சுயேச்சை | 184 |
| 14 | இன்பராஜ் | சுயேச்சை | 168 |
| 15 | ராமகிருஷ்ணன் | சுயேச்சை | 137 |
| 16 | பழனி | சுயேச்சை | 95 |
| 186347 |