சென்னையின் தாகத்தை தணிக்கும் ஏரிகளில் ஒன்றான போரூர் ஏரி 
திருவள்ளூர்

7 - மதுரவாயல்

செய்திப்பிரிவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
பென்ஜமின் அதிமுக
காரம்பாக்கம் க. கணபதி திமுக
லக்கி முருகன் அமமுக
பத்மபிரியா மக்கள் நீதி மய்யம்
கோ.கணேஷ்குமார் நாம் தமிழர் கட்சி

மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதி, தொகுதி மறுசீரமைப்பில் 2011 சட்டப்பேரவை தேர்தலின் போது, உருவாக்கப்பட்டது. இத்தொகுதியின் பெரும்பகுதிகள் சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ளன.

மதுரவாயல் தொகுதியில், கடந்த நவம்பர் (2020) 16-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி, 2 லட்சத்து 15 ஆயிரத்து 698 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 11 ஆயிரத்து 575 பெண் வாக்காளர்கள், 127 இதர வாக்காளர்கள் என மொத்தம் 4 லட்சத்து 27 ஆயிரத்து 400 வாக்காளர்கள் உள்ளனர்.

இத்தொகுதியில் உள்ள போரூர் ஏரி, வளசரவாக்கத்தில் உள்ள பழமைவாய்ந்த சிவன்கோயில் மிகவும் பிரபலம்.

மதுரவாயல் தொகுதியில் வன்னியர்கள், தலித் இனத்தவர்கள் அதிகளவில் வசித்தாலும் பிற மாவட்டங்களில் இருந்து குடியேறிய பிற இனத்தைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். அத்துடன் கட்டுமான துறையில் ஈடுபட்டுள்ள முறைசாரா தொழிலாளர்களும் அதிகளவில் உள்ளனர்.

இத்தொகுதியில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர் மட்ட சாலை திட்டம், ஆற்காடு சாலை, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசல் ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளது.

மதுரவாயல் தொகுதியில் உள்ள 3 ஊராட்சிகளான அயப்பாக்கம், வானகரம், அடையாளம்பட்டு ஆகியவற்றை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாளைய கோரிக்கையாகும்.

மதுரவாயல் தொகுதியில், கடந்த 2011 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான ஜி.பீம்ராவ் 96 ஆயிரத்து 844 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் செல்வம் 72 ஆயிரத்து 833 வாக்குகள் பெற்று, தோல்வியை தழுவினார்.

2016 தேர்தலில் அதிமுக வேட்பாளரான( ஊரகத் தொழில்துறை அமைச்சர்) பா.பெஞ்சமின் 99 ஆயிரத்து,739 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் 91 ஆயிரத்து, 337 வாக்குகள் பெற்று, வெற்றி வாய்ப்பை இழந்தார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

2,15,698

பெண்

2,11,575

மூன்றாம் பாலினத்தவர்

127

மொத்த வாக்காளர்கள்

27,400

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

பா.பென்ஜமின்

அதிமுக

2

ரா.ராஜேஷ்

காங்கிரஸ்

3

க.பீம்ராவ்

மார்க்சிஸ்ட்

4

என்.வி.சீனிவாசன்

பாமக

5

இரா.ஆனந்தபிரியா

ஐஜேகே- பாஜக

6

மு.வாசு

நாம் தமிழர்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 – தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பீமாராவ்

சி பி எம்

96844

2

செல்வம்

பாமக

72799

3

செல்வன்

பிஜேபி

6381

4

சிவசங்கரன்

ஐஜேகே

2256

5

யோசுவா

பிஎஸ்பி

2040

6

செல்வம் .K

சுயேச்சை

1542

7

தில்பஹதூர்

ஜேஎம்எம்

1373

8

ஆர்.ரவீந்திரன்

சுயேச்சை

855

9

தர்மராஜ்

சுயேச்சை

640

10

செந்தில்குமார்

சுயேச்சை

393

11

பாஸ்கரன்

சுயேச்சை

303

12

தமிழ் ஒளி

சுயேச்சை

296

13

சோமசுந்தரம்

சுயேச்சை

169

185925

SCROLL FOR NEXT