2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| உடுமலை மு. ராதாகிருஷ்ணன் | அதிமுக |
| கே.தென்னரசு (காங்கிரஸ்) | திமுக |
| ஆர்.பழனிச்சாமி | அமமுக |
| ஸ்ரீநிதி | மக்கள் நீதி மய்யம் |
| ஆ.பாபு (எ) பாரி பைந்தமிழன் | நாம் தமிழர் கட்சி |
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மற்றொரு முக்கியத் தொகுதி உடுமலைப்பேட்டை. தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசையில் 125-வது இடத்தில் உள்ள தொகுதி. இத்தொகுதிக்குட்பட்ட உடுமலைப்பேட்டை நகராட்சி, நூற்றாண்டு பழமை வாய்ந்த நகராட்சி ஆகும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, கோழிப்பண்ணை, காற்றாலை, பஞ்சாலைகள், தென்னை நார் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இத்தொகுதி உள்ளது.
அனைத்து சமூக மக்களும் இத்தொகுதியில் உள்ளனர். தெலுங்கு பேசும் மக்களும் அதிகளவில் இத்தொகுதியில் வசிக்கின்றனர். இத்தொகுதியில் மொத்தம் உள்ள மக்கள் தொகையில், கொங்கு வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் 25.38 சதவீதமும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் 17.5 சதவீதமும், கம்மவார் நாயுடு இனத்தை சேர்ந்தவர்கள் 9.62 சதவீதமும், 24, 12 பிரிவு செட்டியார்கள் இன மக்கள் 4.5 சதவீதம் பேரும், இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் 11.34 சதவீதம் பேரும் வசிக்கன்றனர்.
தொகுதிக்குள் உள்ளடங்கிய பகுதிகள்
உடுமலைப் பேட்டை தொகுதியில், 33 வார்டுகளை உள்ளடக்கிய உடுமலைப்பேட்டை நகராட்சி முழுமையாக வருகிறது. உடுமலைப் பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 ஊராட்சிகள் இருந்தாலும், சின்ன வீரம்பட்டி, பெரிய கோட்டை, குறிஞ்சேரி ஆகிய 3 ஊராட்சிகள் மட்டுமே, உடுமலை சட்டப்பேரவையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல், உடுமலை தாலுக்காவுக்குட்பட்ட குடிமங்கலம் ஒன்றியத்தில் கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு, ஆமந்தக்கடவு, குப்பம்பாளையம், பெரியபட்டி, பூளவாடி, ஆத்துக்கிணத்துப்பட்டி, கொண்டம்பட்டி, குடிமங்கலம், இலுப்பநகரம், அனிக்கடவு, வாகத்தொழுவு, வீதம்பட்டி, விருகல்பட்டி, சோமவாரப்பட்டி, வடுகபாளையம், கோட்டமங்கலம், பொன்னேரி, புக்குளம், தொட்டம்பட்டி, கொங்கல்நகரம், புதுப்பாளையம், பண்ணைக்கிணர் உள்ளிட்ட 23 ஊராட்சிகளும் இத்தொகுதியில் வருகின்றன. பொள்ளாச்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோளபாளையம், நல்லாம்பள்ளி, சீலக்காம்பட்டி, கோமங்கலம், எஸ்..மலையாண்டிபட்டினம், கோலார்பட்டி, கஞ்சம்பட்டி, தென்குமாரபாளையம், கூலநாய்க்கன்பட்டி, கோமங்கலம்புதூர், சிஞ்சுவாடி, விரல்பட்டி, தாளவாய்ப்பாளையம், தொண்டாமுத்தூர், எஸ்.பொன்னாபுரம், ஊஞ்சவேலாம்பட்டி, ஜாமீன்கோட்டம்பட்டி, கள்ளிப்பட்டி, கொண்டகவுண்டன்பாளையம், மூலனூர், ஆவலப்பம்பட்டி, கொல்லம்பட்டி, ஏ.நாகூர், பூசாரிப்பட்டி, போலிகவுண்டன்பாளையம், ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, மக்கினாம்பட்டி, நாட்டுக்கல்பாளையம் மற்றும் பழையூர் உள்ளிட்ட 29 ஊராட்சிகளும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அதேபோல், பொள்ளாச்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஜமீன் ஊத்துக்குளி, சின்னம்பாளையம், குளேஸ்வரன்பட்டி, மற்றும் சமத்தூர் ஆகிய 4 பேரூராட்சிகள் உடுமலை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்டதாகும்.
தொகுதி மக்களின் கோரிக்கைகள் :
ஆனைமலையாறு- நல்லாறு அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும், அரசு பாலிடெக்னிக், அரசு பொறியியல் கல்லூரி ஏற்படுத்த வேண்டும். அனைத்து விரிவாக்கப் பகுதிளுக்கும் திருமூர்த்தி அணை குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நூற்றாண்டுகளை கடந்த உடுமலை நகராட்சியை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
நகராட்சியை ஒட்டிய ஊராட்சிகளை இணைத்து சிறப்பு நிலை நகராட்சியாக உடுமலை நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும் என்ற கிடப்பில் உள்ள திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. நகரில் பல ஆண்டுகளாக நிலவும் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்கும் வகையில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். தவிர, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விபத்துகளற்ற வாகனப் போக்குவரத்துக்கு வழிவகை செய்யும் வகையிலும் இணைப்புச் சாலை அமைக்க வேண்டும்.
நகர சாலைகள் விரிவாக்கம் செய்ய வேண்டும். கிராமப்புறப் பகுதிகளில் உள்ள சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாகும். அது தவிர, இத்தொகுதியில் மாதிரி நூலகம் ஏற்படுத்தும் திட்டம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியும் பணிகள் முழுமை அடையாமல் உள்ளது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இத்தொகுதியில் உள்ள பழமை வாய்ந்த குட்டைத்திடலை மேம்படுத்தும், மேம்பாட்டுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்காதது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உள் விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும். சந்தை விரிவாக்கம், நகராட்சி பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதும் இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுயே ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி, இத்தொகுதியில் வாக்காளர்கள் நிலவரம்.
ஆண் வாக்காளர்கள் --- 1,20,001
பெண் வாக்காளர்கள் --- 1,39,113
3-ம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் --- 23
மொத்த வாக்காளர்கள் --- 2,69,137
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் களம் கண்டவர்கள்:
உடுமலை கே.ராதாகிருஷ்ணன் - அதிமுக- பெற்றவாக்கு-81,817
மு.க.முத்து- திமுக- பெற்ற வாக்கு-76,130
என்.கந்தசாமி-பாஜக- பெற்ற வாக்கு-7,339
எஸ்.கணேஷ்குமார்- தேமுதிக –பெற்ற வாக்கு-7,090
சி.ரகுபதி ராகவன் - கொ.ம.தே.க- பெற்ற வாக்கு-3,562.
-----
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | கே.ராதாகிருஷ்ணன் | அதிமுக |
| 2 | மு.க.முத்து | திமுக |
| 3 | செ.கணேஷ்குமார் | தேமுதிக |
| 4 | பெ.துரைசாமி | பாமக |
| 5 | யு.கே.பி.என்.கந்தசாமி | பாஜக |
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,21,445 |
| பெண் | 1,27,150 |
| மூன்றாம் பாலினத்தவர் | 20 |
| மொத்த வாக்காளர்கள் | 2,48,615 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
| 1951 | மௌனகுருசாமி நாயுடு | காங்கிரஸ் | 19866 |
| 1957 | எஸ். டி. சுப்பையா கவுண்டர் | சுயேச்சை | 18621 |
| 1962 | ஆர். இராஜகோபாலசாமி நாய்க்கர் | காங்கிரஸ் | 29529 |
| 1967 | எஸ். ஜே. சாதிக்பாட்சா | திமுக | 39796 |
| 1971 | எஸ். ஜே. சாதிக்பாட்சா | திமுக | 45369 |
| 1977 | பி. குழந்தைவேலு | அதிமுக | 28737 |
| 1980 | பி. குழந்தைவேலு | அதிமுக | 50570 |
| 1984 | எசு. திருமலைசாமி கவுண்டர் | காங்கிரஸ் | 56004 |
| 1989 | எஸ். ஜே. சாதிக்பாட்சா | திமுக | 55089 |
| 1991 | கே. பி. மணிவாசகம் | அதிமுக | 75262 |
| 1996 | டி. செல்வராசு | திமுக | 69286 |
| 2001 | சி. சண்முகவேலு | அதிமுக | 78938 |
| 2006 | சி. சண்முகவேலு | அதிமுக | 66178 |
| 2011 | பொள்ளாச்சி ஜெயராமன் | அதிமுக | 95477 |
| ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
| 1951 | தங்கவேலு | இந்திய பொதுவுடமைக் கட்சி | 10574 |
| 1957 | மௌனகுருசாமி நாயுடு | காங்கிரஸ் | 14903 |
| 1962 | எஸ். ஜே. சாதிக்பாட்சா | திமுக | 25514 |
| 1967 | கே. இராமசாமி | காங்கிரஸ் | 25778 |
| 1971 | டி. மலையப்ப கவுண்டர் | சுயேச்சை | 25887 |
| 1977 | யு. கே. பி. நடராசன் | ஜனதா கட்சி | 24619 |
| 1980 | ஆர். டி. மாரியப்பன் | திமுக | 46049 |
| 1984 | ஆர். டி. மாரியப்பன் | திமுக | 46526 |
| 1989 | பி. குழந்தைவேலு | அதிமுக (ஜெ) | 46684 |
| 1991 | ஆர். டி. மாரியப்பன் | திமுக | 44990 |
| 1996 | சி. சண்முகவேலு | அதிமுக | 44966 |
| 2001 | டி. செல்வராசு | திமுக | 39030 |
| 2006 | சி. வேலுச்சாமி | திமுக | 62715 |
| 2011 | இளம்பரிதி | கொநாமுக | 50424 |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | சண்முகவேலு.C | அதிமுக | 66178 |
| 2 | வேலுச்சாமி.C | திமுக | 62715 |
| 3 | ஞானசம்பந்தம்.G.R | தேமுதிக | 9153 |
| 4 | கதிர்வேல்.K | சுயேச்சை | 1207 |
| 5 | கார்த்திகேயன்.M.K | பாஜக | 1179 |
| 6 | வாஞ்சிமுத்து.N | சுயேச்சை | 871 |
| 7 | ராமகனபதி..K | பகுஜன் சமாஜ் கட்சி | 812 |
| 8 | கருப்பசாமி.K | சுயேச்சை | 587 |
| 9 | அய்யப்பன்.K | சுயேச்சை | 308 |
| 10 | அறிவுடைநம்பி.V | சுயேச்சை | 297 |
| 11 | குருசாமி..M | சுயேச்சை | 286 |
| 143593 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | பொள்ளாச்சி ஜெயராமன்.V | அதிமுக | 95477 |
| 2 | இளம்பரிதி.T | கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் | 50917 |
| 3 | விஸ்வநாதன்.M | பாஜக | 3817 |
| 4 | வெங்கடாசலம்.M | சுயேச்சை | 2403 |
| 5 | ஜெயராமன்.K | சுயேச்சை | 1870 |
| 6 | மோகன்ராஜ்.R.S | சுயேச்சை | 1496 |
| 7 | வேலுசாமி.P | பகுஜன் சமாஜ் கட்சி | 865 |
| 156845 |