2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| சதன் பிரபாகர் | அதிமுக |
| நச.முருகேசன் | திமுக |
| செல்வி | அமமுக |
| எம். கருப்பு ராஜ் | மக்கள் நீதி மய்யம் |
| ச.சசிகலா | நாம் தமிழர் கட்சி |
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் ஒன்று பரமக்குடி (தனி) தொகுதி. இத்தொகுதியில் பரமக்குடி நகராட்சி, அபிராமம் பேரூராட்சி மற்றும் பரமக்குடி வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்கள், கமுதி வட்டத்தில் ஒரு பகுதியான த.புனவாசல், வங்காருபுரம், பெரியாணைகுளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வல்லந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, நத்தம், மரக்குளம், மண்டலமாணிக்கம் ஆகிய கிராமங்கள் இடம் பெற்றுள்ளன
இத்தொகுதியில் முதலிடத்தில் விவசாயிகளும், அடுத்தபடியாக நெசவாளர்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளனர். இத்தொகுதியில் நெசவாளர்கள் மற்றும் வியாபாரிகளின் வாக்குகளே வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பவைகளாக தொடர்ந்து உள்ளன.
தொகுதியின் பிரச்சினைகள்
பரமக்குடி மற்றும் எமனேஸ்வரத்தில் அதிகளவில் நெசவாளர்கள் வசிக்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், காட்டன் புடடைகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன. பெரிய தொழிற்சாலைகளும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய தொழில்கள் தொகுதியில் இல்லை. கமுதக்குடியில் மத்திய அரசின் ஸ்பின்னிங் மில் ஒன்றும், அச்சங்குளத்தில் கூட்டுறவு நூற்பாலை ஒன்றும் உள்ளது. இதில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதனால் படித்த மற்றும் படிக்காத இளைஞர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். பருவ மழை சரியாக பெய்யவில்லை எனில் விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் சிரமப்படுவது தொடர்கிறது. இப்பகுதியில் பருத்தி, மிளகாய் அதிகளவில் பயிரிடப்படுவதால் பருத்தியை பிரித்தெடுக்கும் ஜின்னிங் மில், மிளகாயை அரைத்து பவுடர் தயாரிப்பது உள்ளிட்ட தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும் என நீண்ட நாட்ளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வைகையாற்றின் தென்கரையில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டதால் பரமக்குடியின் போக்குவரத்து பிரச்சினை ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. வைகையாற்றின் குறுக்கே பார்த்திபனூர் மதகு அணை அமைந்துள்ளது.
பரமக்குடியில் இரண்டு அரசு கலைக்கல்லூரிகள், ஒரு அரசு ஐடிஐ, ஒரு தனியார் பொறியியல் கல்லூரி, ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி, 3 தனியார் கல்வியியல் கல்லூரிகள் அமைந்துள்ளன.
தேர்தல் வரலாறு
1952 முதல் 2016 வரை 15 முறை நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 3 முறை, சுயேட்சை ஒரு முறை, திமுக 3 முறை, அதிமுக 7, தமாகா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில் 2011-ல் அதிமுக சார்பில் டாக்டர் எஸ்.சுந்தர்ராஜனும், 2016-ல் அதிமுக சார்பில் டாக்டர் எஸ்.முத்தையாவும் வெற்றி பெற்றனர்.
அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையா, அமமுகவிற்கு சென்றதால், 2019-ல் இடைத்தேர்தல் வந்தது. இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சம்பத்குமாரை தோற்கடித்து அதிமுக வேட்பாளர் என்.சதன்பிரபாகர் வெற்றி பெற்றார்.
டாக்டர் எஸ்.முத்தையா அமமுகவிற்குச் சென்றதால் இரண்டரை ஆண்டுகளில் எந்த வளர்ச்சிப்பணிகளும் தொகுதியில் நடைபெறவில்லை. அதனால் இத்தொகுதி மக்கள் வெறுப்படைந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் மாவட்டத்தில் அதிக மக்கள் வசிக்கும் நகராட்சியான பரமக்குடியில் பாதாளச்சாக்கடைப் பணியும் நிறைவேற்றப்படவில்லை.
2019 இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் என்.சதன் பிரபாகர் 82438 வாக்குகளும், திமுக வேட்பாளர் எஸ்.சம்பத்குமார் 68406 வாக்குகளும், அமமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையா 9672 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் கே.ஹேமலதா 6710 வாக்குகளும், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஏ.சங்கர் 5421 வாக்குகளும் பெற்றனர். இதில் அதிமுக, திமுக வேட்பாளர்களை தவிர, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் மற்றும் 8 சுயேட்சை வேட்பாளர்கள் என 11 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,23,498 |
| பெண் | 1,25,006 |
| மூன்றாம் பாலினத்தவர் | 13 |
| மொத்த வாக்காளர்கள் | 2,48,517 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | டாக்டர் சி.முத்தையா | அதிமுக |
| 2 | உ.திசைவீரன் | திமுக |
| 3 | ம.இருளன் | விசிக |
| 4 | ரா.தங்கராஜ் | பாமக |
| 5 | பி.பாலகணபதி | பாஜக |
| 6 | வ.ஹேமலதா | நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
| ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு |
| 2006 | R.இராம் பிரபு | இ.தே.கா | 45.36 |
| 2001 | R.இராம் பிரபு | த.மா.கா | 49.58 |
| 1996 | U.திசை வீரன் | திமுக | 43.18 |
| 1991 | S.சுந்தர ராஜ் | அதிமுக | 66.72 |
| 1989 | S.சுந்தர ராஜ் | அதிமுக | 36.53 |
| 1984 | K.பாலுச்சாமி | அதிமுக | 58.19 |
| 1980 | R.தவசி | அதிமுக | 54.22 |
| 1977 | K.உக்கிர பாண்டியன் | அதிமுக | 36.31 |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | R. ராம் பிரபு | காங்கிரஸ் | 51075 |
| 2 | S. சுந்தர ராஜ் | அ.தி.மு.க | 50021 |
| 3 | A. திருமாமலை ராஜா | தே.மு.தி.க | 4554 |
| 4 | K. உக்ரபாண்டியன் | பி.ஜே.பி | 2090 |
| 5 | A. காளிதாஸ் | பி.எஸ்.பி | 1654 |
| 6 | R. பாண்டியன் | சுயேச்சை | 1307 |
| 7 | U. காமராசன் | சுயேச்சை | 614 |
| 8 | L. செல்வம் | சுயேச்சை | 405 |
| 9 | C. கருப்பையா | சுயேச்சை | 354 |
| 10 | N. பொன்வேந்தச் சோழன் | ஜே.டி | 275 |
| 11 | M. அழகு | சுயேச்சை | 251 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | J.S. சுந்தர்ராஜ் | அ.தி.மு.க | 86150 |
| 2 | R. ராம்பிரபு | காங்கிரஸ் | 51544 |
| 3 | நாகராஜன் சுப | பாஜக | 4787 |
| 4 | R. காந்தி | பகுஜன் சமாஜ் கட்சி | 1538 |
| 5 | V. வேலூ | சுயேச்சை | 1522 |
| 6 | M. சரவணகுமார் | டி.டி.எம்.கே | 1444 |
| 7 | M. ராசமுர்த்தி | சுயேச்சை | 552 |
| 8 | V. முருகானந்தம் | சுயேச்சை | 388 |
| 9 | G. வடிவேலு | சுயேச்சை | 358 |
| 10 | G. கணேசன் | சுயேச்சை | 290 |
| 11 | K. குமரேசன் | சுயேச்சை | 282 |
| 148855 |