புதுக்கோட்டை

182 - ஆலங்குடி

செய்திப்பிரிவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
தர்ம. தங்கவேல் அதிமுக
மய்யநாதன் திமுக
டி.விடங்கர் அமமுக
வைரவன் மக்கள் நீதி மய்யம்
சி.திருச்செல்வம் நாம் தமிழர் கட்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் முப்போகமும் விளையும் பகுதியாகவும், எப்போதும் செழிப்பகவே காணப்படக் கூடியதுமாக ஆலங்குடி தொகுதி உள்ளது.

இத்தொகுதியில், ஆசிய அளவில் அதிக உயரமுள்ள (33 அடி) குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் குதிரை சிலை, கீரமங்கலத்தில் சிவன் சிலை மற்றும் அங்கு புலவர் நக்கீரருக்கு முழு உருவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், வடகாடு, மாங்காடு, கீரமங்கலம் பகுதியில் விளையும் பலாபழங்கள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மேலும், மலர்களும் அதிகளவில் விளைகிறது.ஆலங்குடியானது மாநிலத்தில் கடலை சந்தைக்கு சிறப்பு பெற்றுள்ளது.

இத்தொகுதியில் முத்தரையர், முக்குலத்தோர் அதிகளவில் வசிக்கின்றனர். மேலும், இத்தொகுதியில் திருவரங்குளம் ஒன்றியத்தில் 48ஊராட்சிகளும், ஆலங்குடி, கீரமங்கலம் ஆகிய 2பேரூராட்சிகளும், அறந்தாங்கி ஒன்றியத்தில் 32ஊராட்சிகளும் இணைந்துள்ளன.

தொகுதி பிரச்சினைகள்

இத்தொகுதியில் அதிகமாக ஆழ்துளை கிணறுகள் இருப்பதன் மூலம் மின்தேவையும் அதிகரித்திருப்பதால் ஆலங்குடியில் மின்மாற்றி பராமரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

மேலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவருவதால் நீர்நிலைகளை மேம்படுத்தி ஆற்று தண்ணீரை திருப்பிவிட வேண்டும். அரசு கலை அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகளை ஏற்படுத்த வேண்டும். வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் ஏற்படுத்தும் அளவுக்கு தொழில்சாலைகளை உருவாக்க வேண்டும்.

மேலும்,தேங்காய், பலாப்பழம் அதிகளவில் விளைவதால் அவற்றில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும்.

விவசாயிகள் விளைவிக்கும் காய், கனிகளை கொள்முதல் செய்ய அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். நிர்வாக வசதிக்காக திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளன.

2016 தேர்தல்

கடந்த 2016-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவ.வீ.மெய்யநாதன் 72,992 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஞான.கலைச்செல்வன் 63,051 வாக்குகளும் பெற்றனர்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,06,955

பெண்

1,09,971

மூன்றாம் பாலினத்தவர்

4

மொத்த வாக்காளர்கள்

2,16,930

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஞான. கலைச்செல்வன்

அதிமுக

2

வீ. மெய்யநாதன்

திமுக

3

க. சந்திரசேகரன்

மதிமுக

4

சுப. அருள்மணி

பாமக

5

அ. சரவணன்

ஐஜேகே

6

து. கலா

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

ஆலங்குடி தாலுகா (பகுதி)

மேலப்பட்டி ராசியமங்கலம்(உடையார்), பாச்சிக்கோட்டை, குழந்தைவிநாயகர்கோட்டை, புதுக்கோட்டை, விடுதி, ,கீழப்பட்டி ராசியமங்கலம்(உடையார்), மேலாத்தூர், கீழாத்தூர், வடகாடு, புள்ளான்விடுதி, நெடுவாசல் மேல்பாதி, நெடுவாசல் கீழ்பாதி, ஆண்டவராயபுரம், செட்டியேந்தல், அணவயல் மி பிட், அணவயல் மிமி பிட், லெட்சுமிநரசிம்மபுரம், புளிச்சங்காடு, கறம்பக்காடு ஜமீன், கறம்பக்காடு ஐமீன் மிமிபிட், செரியலூர் இனாம் மி பிட் செரியலூர் இனம் மிமி பிட் பனைகுளம், குலமங்கலம் தெற்கு, குலமங்கலம் வடக்கு, கொத்தமங்கலம் தெற்கு, சேந்தன்குடி, நகரம், மாங்காடு கொத்தமங்கலம் வடக்கு, ஆலங்காடு, சூரன்விடுதி,கல்லாலங்க்குடி, பள்ளத்திவிடுதி, பத்தம்பட்டி, குப்பாக்குடி, ஆயிப்பட்டி, கோவிலூர், தேவஸ்தானம், கோவிலூர், கொத்தக்கோட்டை, மாஞ்சன்விடுதி, காயம்பட்டி, வேப்பங்க்குடி, இம்னாம்பட்டி, திருவரங்குளம், திருக்கட்டளை, கைக்குறிச்சி, விஜயரெகுநாதபுரம், பூவரசக்குடி, மணியம்பலம், வண்டக்கோட்டை, வலத்திராக்கோட்டை, களங்க்குடி, கன்னியாபட்டி, நம்புக்குழி, கூடலூர், கத்தக்குறிச்சி, பாலையூர், முத்துப்பட்டிணம், குளவாய்ப்பட்டி, தட்சிணாபுரம், வெங்கிடகுளம், வெண்ணாவல்குடி, அரையப்பட்டி, கீழையூர், சேந்தாக்குடி, மாலக்குடி, கொத்தமங்கலம், மற்றும் இசுகுபட்டி கிராமங்கள்.

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

1957

சின்னையா மற்றும் அருணாசலதேவர்

இந்திய தேசிய காங்கிரஸ்

1962

பி.முருகையன்

திமுக

1967

கே.வி.சுப்பையா

திமுக

1971

கே.வி.சுப்பையா

திமுக

1977

த.புஷ்பராஜு

இந்திய தேசிய காங்கிரஸ்

1980

பி.திருமாறன்

அதிமுக

1984

அ.வெங்கடாசலம்

அதிமுக

1989

K.சந்திரசேகரன்,B.v.sc.,

திமுக

1991

S.சண்முகநாதன்

அதிமுக

1996

அ.வெங்கடாசலம்

சுயேச்சை

2001

அ.வெங்கடாசலம்

அதிமுக

2006

S.ராசசேகரன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

2011

கு.ப.கிருஷ்ணன்

அதிமுக

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

ராஜசேகரன்.S

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

60122

2

வெங்கடாசலம்.A

அதிமுக

50971

3

செல்வின்ராஜ்.K

தேமுதிக

16739

4

ராஜபரமசிவம்

சுயேச்சை

14939

5

ஜீவானந்தம்.R

பாஜக

7634

6

கருப்பையா.K

பகுஜன் சமாஜ் கட்சி

1400

7

சிவகுமார் துரை

சுயேச்சை

1181

152986

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

கிருஷ்ணன்.கு.ப

அதிமுக

57250

2

அருள்மணி.S

பாமக

52123

3

ராஜபாண்டியன்.A.V

சுயேச்சை

21717

4

சரவணன்.A

இந்திய ஜனநாயக கட்சி

3666

5

ஜெகநாதன்

பாஜக

2033

6

நாகாமூர்த்தி

சுயேச்சை

1414

138203

SCROLL FOR NEXT