2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| வைரமுத்து | அதிமுக |
| எஸ். ரகுபதி | திமுக |
| எஸ்.எம்.எஸ்.முனியராஜ் | அமமுக |
| ஆர். திருமேனி | மக்கள் நீதி மய்யம் |
| உ.சிவராமன் | நாம் தமிழர் கட்சி |
திருமயத்தில் பல்லவ மன்னர்களால் மலையை குடைந்து கட்டப்பட்ட சிவன், பெருமாள் குடைவரை கோயில்கள் உள்ளன. இங்குள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா பிரசித்தி பெற்றதாகும்.
திருமயத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டை உள்ளது. மேலும் திருமயம் முன்னாள் முதல் அமைச்சர் காமராஜரின் அரசியல் குருவான சத்தியமூர்த்தி பிறந்து வாழ்ந்த ஊராகும்.
திருமயத்தில் இருந்து 15-வது கிலோ மீட்டர் தூரத்தில் காட்டுபாவா பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த தர்காவில் மத பேதமின்றி அனைவரும் வழிபடுகின்றனர்.
இத்தொகுதியில் முத்தரையர், கள்ளர், மறவர் இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இத்தொகுதியில் திருமயம், பொன்னமராவதி ஒன்றிய பகுதிகள், அரிமளம் பேரூராட்சியும் இணைக்கப்பட்டுள்ளன.
தொகுதி மக்கள் பிரச்சினைகள்
இத்தொகுதியில் பிரதான தொழில் விவசாயம். இங்குள்ள நிலங்கள் வானம் பார்த்த பூமியாகத்தான் இருந்து வருகின்றன. மழை பெய்தால்தான் விவசாயம் நடைபெறும்.
சுதந்திர போராட்ட தியாகி சத்தியமூர்த்திக்கு திருமயத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும். திருமயம் பகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும். பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
திருமயத்தை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். கல் குவாரிகளை ஒழுங்குபடுத்த வேண்டும். அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். பொன்னமராவதியில் மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் உருவாக்க வேண்டும் போன்றவை இத்தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இத்தொகுதியில் கடந்த 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.ரகுபதி 72,373 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.கே.வைரமுத்து 71,607 வாக்குகளும் பெற்றனர்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,10,974 |
| பெண் | 1,16,167 |
| மூன்றாம் பாலினத்தவர் | 3 |
| மொத்த வாக்காளர்கள் | 2,27,144 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | பி.கே. வைரமுத்து | அதிமுக |
| 2 | எஸ். ரகுபதி | திமுக |
| 3 | பிஎல்.ஏ. சிதம்பரம் | தமாகா |
| 4 | ஏ . சுரேஷ் | பாமக |
| 5 | பி. வடமலை | பாஜக |
| 6 | எம். கனகரத்தினம் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
திருமயம் தாலுக்கா (பாலக்குறிச்சி கிராமம் தவிர)
2006 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | சுப்புராம்.R.M | காங்கிரஸ் | 47358 |
| 2 | ராதாகிருஷ்ணன் | அதிமுக | 47044 |
| 3 | கிருஷ்ணன் | பாஜக | 10490 |
| 4 | முருகேசன் | தேமுதிக | 7863 |
| 5 | செல்லக்கண்ணு | பகுஜன் சமாஜ் கட்சி | 1581 |
| 6 | ராதாகிருஷ்ணன் | சுயேச்சை | 1462 |
| 7 | வெங்கடேசன் | டி.என்.ஜே.சி | 618 |
| 8 | நாராயணன் | சுயேச்சை | 607 |
| 9 | ரவிச்சந்திரன் | சுயேச்சை | 525 |
| 10 | சுப்பிரமணியன் | சுயேச்சை | 438 |
| 117986 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | வைரமுத்து.P.K | அதிமுக | 78913 |
| 2 | சுப்புராம்.R.M | காங்கிரஸ் | 47778 |
| 3 | வடமலை.P | பாஜக | 2686 |
| 4 | இளங்கோ.R | சுயேச்சை | 1457 |
| 5 | ராதாகிருஷ்ணன் | சுயேச்சை | 1046 |
| 6 | சஞ்சய் காந்தி.S | பகுஜன் சமாஜ் கட்சி | 1021 |
| 7 | அரிமளம் தியாகி M சுப்ரமணிய முத்தரையர் | சுயேச்சை | 927 |
| 8 | முரளி (எ) மீனாட்சி சுந்தரம் | சுயேச்சை | 560 |
| 9 | பாலமுருகன்.C | சுயேச்சை | 541 |
| 10 | பாண்டியராஜன்.S | சுயேச்சை | 500 |
| 135429 |