2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| டாக்டர் ஏ. சரோஜா | அதிமுக |
| மதிவேந்தன் | திமுக |
| எஸ்.அன்பழகன் | அமமுக |
| இராம்குமார் | மக்கள் நீதி மய்யம் |
| கா.சிலம்பரசி | நாம் தமிழர் கட்சி |
ராசிபுரம் தொகுதியில் ஜவ்வரிசி உற்பத்தி மற்றும் விவசாயம், கால்நடை வளர்ப்பும் பிரதான தொழிலாக உள்ளது. கால்நடை வளர்ப்பை சார்ந்து மேற்கொள்ளப்படும் நெய் உற்பத்தி தமிழக அளவில் பிரசித்தி பெற்றது. அதேபோல் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது.
தொகுதியின் முக்கிய பிரச்சினைகள்:
தொகுதியில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டம், போக்குவரத்து நெரிசல் போன்றவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு, நகரின் மையத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. இதேபோல், பாதாள சாக்கடை திட்டம் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக முடிவடையாமல் இருப்பது முக்கிய பிரச்சினையாகும்.
தொகுதிக்கு உட்பட்ட போதமலைக்கு, பல ஆண்டுகளாக சாலை வசதியில்லை. அங்குள்ள மலைவாழ் மக்களின் தொடர் கோரிக்கை பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்:
ராசிபுரம் தொகுதியில் ராசிபுரம் நகராட்சி மற்றும் வெண்ணந்தூர், அத்தனூர், ஆர். புதுப்பட்டி, பட்டணம் மற்றும் பிள்ளாநல்லூர் பேரூராட்சிகள் அடங்கியுள்ளன. இதுபோல் ராசிபுரம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. மேலும், ராசிபுரம் வட்டத்தில் உள்ள பல கிராமங்களும் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
கட்சிகளின் வெற்றி:
கடந்த 1951, 1957 என இருமுறை காங்கிரஸ் கட்சி தொகுதியை தக்க வைத்தது. 1962, 1967 மற்றும் 1971-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 3 முறையும், 1989 மற்றும் 2006-ம் ஆண்டுகள் என திமுக 5 முறை வெற்றி பெற்றுள்ளது. இதுபோல் 1977, 1980, 1984-ம் ஆண்டு என தொடர்ச்சியாக 3 முறை மற்றும் 1991, 1996, 2001-ம் ஆண்டு தொடர்ச்சியாக 3 முறை என மொத்தம் 8 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,15,603 |
| பெண் | 1,20,037 |
| மூன்றாம் பாலினத்தவர் | 11 |
| மொத்த வாக்காளர்கள் | 2,35,651 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | டாக்டர் வி. சரோஜா | அதிமுக |
| 2 | வி. பி. துரைசாமி | திமுக |
| 3 | ஜி. ஆர்ஜூன் | விசிக |
| 4 | ஜெ. புஷ்பாகாந்தி | பாமக |
| 5 | சி. குப்புசாமி | பாஜக |
| 6 | எஸ். அருண்குமார் | நாம் தமிழர் |
| 7 | ப. பாரதி | கொமதேக |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
ராசிபுரம் வட்டம் (பகுதி) பொன்பரப்பிபட்டி, மின்னக்கல் அக்ரஹாரம், அனந்தகவுண்டம்பாளையம், குமாரபாளையம், அண்ணாமலைப்பட்டி, கீரனூர், பல்லவநாய்க்கன்பட்டி, மலையாம்பாளையம், குட்டலாடம்பட்டி, மேலூர், கீழுர், கிடமலை, ஆயில்பட்டி, நாவல்பட்டி, மங்களபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாய்க்கன்பட்டி, நாரைக்கிணறு பிளாக். மி (ஆர்.எப்.), முத்துருட்டு, ஆயிபட்டி, நாரைக்கிணறு, நாரைக்கிணறு தெற்கு (ஆர்.எப்.), கார்கூடல்பட்டி, மூலப்பள்ளிபட்டி, மலையாம்பட்டி, புதூர்மலையாம்பட்டி, கல்லாங்குளம், புதுப்பாளையம், தேங்கல்பாளையம், ஆலாம்பட்டி, ஆலவாய்ப்பட்டி, நாச்சிபட்டி, மதியம்பட்டி, பொரசலபட்டி, அக்கரைப்பட்டி, செம்மாண்டப்பட்டி, நடுப்பட்டி, சௌதாபுரம், மாட்டுவேலம்பட்டி, பழத்தின்னிப்பட்டி, மூலக்காடு, முத்துகாளிபட்டி, கட்டனாச்சம்பட்டி, கோனேரிபட்டி, காக்காவேரி, வடுகம்முனியம்பாளையம், பட்டணம் முனியம்ப்பாளையம், வடுகம், மூலக்காடு, கரியாம்பட்டி, ஊனந்தாங்கல், மூலக்குறிச்சி, பெரியக்குறிச்சி, மாவார், பெரப்பஞ்சோலை, பெரியக்கோம்பை, புதுப்பள்ளப்பட்டி, மூலக்குறிச்சி, பெரியசேக்கடி, வரகூர்கோம்பை, பச்சகவுண்டம்பட்டி, கொளக்கமேடு, தொட்டியம்பட்டி, சந்திரசேகரபுரம் அக்ரஹாரம், இராசிபுரம், ஆண்டகளூர், அணைக்கட்டிபாளையம், கூனவேலம்பட்டி, எல்லபாளையம், பொன்குறிச்சி, கொப்பம்பட்டி, ஆயிபாளையம், கொமாரபாளையம், குருக்கபுரம், அணைப்பாளையம், முருங்கபட்டி, சிங்களாத்தபுரம், மோளப்பாளையம் மற்றும் சின்னசேக்கடி கிராமங்கள்.
வெண்ணந்தூர் (பேரூராட்சி), அத்தனூர் (பேரூராட்சி), ஆர்.புதுப்பட்டி (பேரூராட்சி), பட்டிணம் (பேரூராட்சி), இராசிபுரம் (நகராட்சி) மற்றும் பிள்ளாநல்லூர் (பேரூராட்சி).
கட்சிகளின் வெற்றி:
கடந்த 1951, 1957 என இருமுறை காங்கிரஸ் கட்சி தொகுதியை தக்க வைத்தது. 1962, 1967 மற்றும் 1971-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 3 முறையும், 1989 மற்றும் 2006-ம் ஆண்டுகள் என திமுக 5 முறை வெற்றி பெற்றுள்ளது. இதுபோல் 1977, 1980, 1984-ம் ஆண்டு என தொடர்ச்சியாக 3 முறை மற்றும் 1991, 1996, 2001-ம் ஆண்டு தொடர்ச்சியாக 3 முறை என மொத்தம் 8 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1977 - 2011 )
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
| 1951 | டி. எம். காளியண்ணன் | காங்கிரஸ் | 18553 |
| 1957 | எ. இராஜா கவுண்டர் | காங்கிரஸ் | 20983 |
| 1962 | என். பி. செங்கோட்டுவேல் | திமுக | 26846 |
| 1967 | பி. பெரியசாமி | திமுக | 38402 |
| 1971 | ஆர். நைனாமலை | திமுக | 41079 |
| 1977 | பி. துரைசாமி | அதிமுக | 33762 |
| 1980 | கே. பி. இராமலிங்கம் | அதிமுக | 49779 |
| 1984 | கே. பி. இராமலிங்கம் | அதிமுக | 51565 |
| 1989 | எ. சுப்பு | திமுக | 39534 |
| 1991 | கே. பழனியம்மாள் | அதிமுக | 75855 |
| 1996 | பி. ஆர். சுந்தரம் | அதிமுக | 42294 |
| 2001 | பி. ஆர். சுந்தரம் | அதிமுக | 67332 |
| 2006 ** | கே. பி. இராமசாமி | திமுக | 62629 |
| 2011 | ப. தனபால் | அதிமுக | 90186 |
| ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
| 1951 | கே. இராமசாமி | சுயேச்சை | 10189 |
| 1957 | கே. வி. கே. இராமசாமி | சுயேச்சை | 17545 |
| 1962 | முத்துசாமி கவுண்டர் | காங்கிரஸ் | 26776 |
| 1967 | கே எம். கவுண்டர் | காங்கிரஸ் | 30873 |
| 1971 | பி. கணபதி | காங்கிரஸ் (ஸ்தாபன) | 31161 |
| 1977 | கே. சி. பெரியசாமி | திமுக | 19374 |
| 1980 | பி. டி. முத்து | திமுக | 34175 |
| 1984 | பி. காளியப்பன் | திமுக | 41087 |
| 1989 | வி. தமிழரசு | அதிமுக (ஜெ) | 39074 |
| 1991 | பி. எ. ஆர். இளங்கோவன் | திமுக | 25625 |
| 1996 | ஆர். ஆர். தமயந்தி | திமுக | 41840 |
| 2001 | கே. பி. இராமலிங்கம் | திமுக | 44303 |
| 2006 ** | பி. ஆர். சுந்தரம் | அதிமுக | 57660 |
| 2011 | வி.பி. துரைசாமி | திமுக | 65469 |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | K.P. ராமசாமி | தி.மு.க | 62629 |
| 2 | P.R. சுந்தரம் | அ.தி.மு.க | 57660 |
| 3 | R. ராஜாகோவுண்டர் | தே.மு.தி.க | 11992 |
| 4 | K. ராமசாமி | சுயேச்சை | 1490 |
| 5 | ராஜாமணி வேலி | பி.ஜே.பி | 1427 |
| 6 | P. வெங்கடாசலம் | சுயேச்சை | 889 |
| 7 | P. துரைசாமி | சுயேச்சை | 530 |
| 8 | R. சின்னுசாமி | சுயேச்சை | 478 |
| 9 | L. சண்முகம் | சுயேச்சை | 213 |
| 10 | R. கணபதி | சுயேச்சை | 155 |
| 11 | R. கோவிந்தசாமி | சுயேச்சை | 147 |
| 12 | S. கந்தசாமி | சுயேச்சை | 140 |
| 137750 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | P. தனபால் | அ.தி.மு.க | 90186 |
| 2 | V.P. துரைசாமி | தி.மு.க | 65469 |
| 3 | L. முருகன் | பி.ஜே.பி | 1730 |
| 4 | S. பெரியசாமி | ஐ.ஜே.கே | 1704 |
| 5 | V. ரங்கராசு | சுயேச்சை | 1700 |
| 6 | P.K. செல்வம் | சுயேச்சை | 612 |
| 7 | T. விநாயகமூர்த்தி | பி.எஸ்.பி | 427 |
| 8 | C. கண்ணன் | சுயேச்சை | 389 |
| 162217 |