2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| ராவணன் (பாமக) | அதிமுக |
| நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) | திமுக |
| எம்.நீதிமோகன் | அமமுக |
| ஜி. சித்து | மக்கள் நீதி மய்யம் |
| சு.பொன் இளவழகி | நாம் தமிழர் கட்சி |
கீழ்வேளூர் (தனி) கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 87,677 ஆண் வாக்காளர்களும், 91,578 பெண் வாக்காளர்களும், 9 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 1,79,264 வாக்காளர்கள் உள்ளனர்.
வெட்டாற்றில் நாகூரிலிருந்து 8 கி.மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உட்புகுந்துள்ளது. இதனால் கீழ்வேளூர் ஒன்றியம் கோகூர், ஒக்கூர் உட்பட பல கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராகி விட்டது. எனவே வெட்டாற்றில் படுக்கையணை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை படுக்கையணை கட்டியபாடில்லை. தேவூர் கடுவையாற்றில் முழுமையாக தூர் வராததால் செடிகொடிகள் மண்டி பாசனத்திற்கு தண்ணீர் வடிவதில்லை என தேவூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. கிராம உட்சாலைகள் போக்குவரத்திற்கு லாய்க்கற்ற வகையில் மிகவும் மோசமாக உள்ளது. எனவே உடனடியாக கிராம சாலைகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கீழ்வேளூர் பகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலைகள் இல்லை. எனவே விழுந்தமாவடி பகுதியில் மாம்பழ கூழ் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கீழ்வேளூரில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போது தொடங்கி வைத்த வேளாண் கல்லூரியை மீண்டும் தொடங்க வேண்டும். கீழ்வேளூரில் சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட மதிவாணன் 61,999 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மீனா 51,829 வாக்குகள் பெற்றார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 80,936 |
| பெண் | 82,434 |
| மூன்றாம் பாலினத்தவர் | - |
| மொத்த வாக்காளர்கள் | 1,63,370 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | என்.மீனா | அதிமுக |
| 2 | உ.மதிவாணன் | திமுக |
| 3 | வி.பி.நாகைமாலி | மார்க்சிஸ்ட் |
| 4 | ஏ.வனிதா | பா.ம..க |
| 5 | எஸ்.குமார் | பா.ஜ.க |
| 6 | க.பழனிவேல் | நாம் தமிழர் |
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | மகாலிங்கம்.P | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | 59402 |
| 2 | மதிவாணன்.U | திமுக | 58678 |
| 3 | தேவகி.G | சுயேச்சை | 1487 |
| 4 | ஷாஜஹான்.J | பகுஜன் சமாஜ் கட்சி | 743 |
| 5 | செல்வராசு.T | சுயேச்சை | 605 |
| 6 | சதாசிவம்.K | சுயேச்சை | 339 |
| 121254 |