2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| மரகதம் குமரவேல் | அதிமுக |
| மல்லை சி.ஏ. சத்யா (மதிமுக) | திமுக |
| என்.மூர்த்தி | அமமுக |
| தினேஷ் | மக்கள் நீதி மய்யம் |
| வெ.சுமிதா | நாம் தமிழர் கட்சி |
அதிக அளவு விவசாயிகளையும், விவசாயத்தை பிரதான தொழிலாகவும் கொண்டது மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி. இந்தத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது.
செங்கல்பட்டு, அச்சிறுப்பாக்கம், உத்திரமேரூர் தொகுதிகள் இதன் எல்லைகளாக உள்ளன. இந்தத் தொகுதியில் கடந்த நவம்பர் (2020) 16-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி ஒரு லட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கு 366 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்துக்கு 13 ஆயிரத்து 482 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 46 பேர் என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்துக்கு 894 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்தத் தொகுதி மதுராந்தகம் நகரம் மற்றும் பல்வேறு கிராமங்களையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இந்தத் தொகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும் மிகப் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி உள்ளது. பிரச்சித்தி பெற்ற ஏரிக் காத்த ராமர் கோயில் உள்ளது. தொகுதிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் மறைமலை நகர், மகேந்திரா சிட்டி போன்ற இடங்களில் உருவான தொழிற்பேட்டைகளுக்கு பிறகு வெளியில் இருந்து பலர் மதுராந்தகத்திலும் குடியேறியுள்ளனர். இந்தத் தொகுதியில் அதிக அளவு வன்னியர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், முதலியார் சமூகத்தினர் உள்ளனர்.
இந்தத் தொகுதியில் விவசாயத்துக்கு முக்கிய ஆதாரம் மதுராந்தகம் ஏரி. இந்த ஏரி தூர்வாரப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிறது. இதனை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தத் தொகுதியின் பல கிராமங்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளன. இந்தப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவது உண்டு. இதனை தடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
கடந்த 1967 முதல் 2011 வரை நடைபெற்ற 11 சட்டப்பேரவை தேர்தல்களில், 5 முறை தேசிய திமுகவும், 4 முறை அதிமுகவும் வெற்றிபெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி ஒருமுறை (2006) வென்றுள்ளது. கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர் டி.யசோதாதவும், கடைசியாக 2011-ல் நடந்த தேர்தலில் அதிமுக உறுப்பினர் கணிதா வெற்றிபெற்றனர்.
இந்தத் தொகுதியில் 1971-ம் ஆண்டில் இருந்து 5 முறை திமுகவும், 4 முறை அதிமுகவும், ஒரு முறை அதிமுக (ஜெ) அணியும், ஒரு முறை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி 73,693 வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சி.கே.தமிழரசன் 70736 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | செ.கு.தமிழரசன் | இகுக |
| 2 | சு.புகழேந்தி | திமுக |
| 3 | மா.தென்னரசு | தேமுதிக |
| 4 | எ.ஆதிகேசவன் | பாமக |
| 5 | மா.வினாயகமூர்த்தி | ஐஜேகே |
| 6 | பா.வெற்றிச்செல்வம் | நாம் தமிழர் |
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,10,366 |
| பெண் | 1,13,482 |
| மூன்றாம் பாலினத்தவர் | 46 |
| மொத்த வாக்காளர்கள் | 3,00,569 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள்
| 1952 | பி. பரமேஸ்வரன் மற்றும் வெங்கடசுப்பா ரெட்டி | காங்கிரஸ் |
| 1957 | வெங்கட சுப்பா ரெட்டி மற்றும் எல்லப்பன் | இந்திய தேசிய காங்கிரசு மற்றும் கட்சி சாராதவர் |
| 1962 | பி. பரமேஸ்வரன் | காங்கிரஸ் |
| 1967 | கோதண்டம் | திமுக |
| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
| 1971 | மதுராந்தகம் சி.ஆறுமுகம் | திமுக |
| 1977 | மதுராந்தகம் சி.ஆறுமுகம் | திமுக |
| 1980 | உக்கம்சந்த் | அதிமுக |
| 1984 | மதுராந்தகம் சி.ஆறுமுகம் | திமுக |
| 1989 | உக்கம்சந்த் | அதிமுக |
| 1991 | சொக்கலிங்கம் | அதிமுக |
| 1996 | வெங்கடேசன் | திமுக |
| 2001 | வாசுதேவன் | அதிமுக |
| 2006 | டாக்டர் காயத்ரி தேவி | காங்கிரஸ் |
| 2006 சட்டமன்ற தேர்தல் | 35. மதுராந்தகம் | ||
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | K. காயத்ரி தேவி | ஐ.என்.சி | 51106 |
| 2 | K. அப்பாதுரை | அ.தி.மு.க | 47415 |
| 3 | D. கஜேந்திரன் | தே.மு.தி.க | 9885 |
| 4 | M. சுந்தரமூர்த்தி | பி.ஜே.பி | 2282 |
| 5 | S. மேனகா | சுயேட்சை | 1840 |
| 6 | C. நடராஜன் | சுயேட்சை | 1256 |
| 7 | M. தேவராஜ் | சுயேட்சை | 1178 |
| 8 | P. ராஜேந்திரபாபு | பி.எஸ்.பி | 989 |
| 9 | M. சண்முகம் | எஸ்.பி | 416 |
| 10 | K. அக்பர் | டி.என்.ஜே.சி | 321 |
| 11 | K.G. சம்பாத் | சுயேட்சை | 307 |
| 12 | A.L. சுல்தான்மொஹிதின் | சுயேட்சை | 165 |
| 13 | S.P. ராமசந்திரன் | சுயேட்சை | 142 |
| 14 | R. லக்ஷ்மிபதி | வி.எ.கே | 116 |
| 117418 |
| 2011 சட்டமன்ற தேர்தல் | 35. மதுராந்தகம் | ||
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | S. கணிதா | அ.தி.மு.க | 79256 |
| 2 | K. ஜெயகுமார் | ஐ.என்.சி | 60762 |
| 3 | C. ஜெய்சங்கர் | சுயேட்சை | 1885 |
| 4 | R. வரதன் | பி.ஜே.பி | 1630 |
| 5 | V.R. பரமசிவம் | சுயேட்சை | 1223 |
| 6 | S. தனசேகரன் | எல்.எஸ்.பி | 886 |
| 7 | S. விநாயகம் | பி.எஸ்.பி | 784 |
| 8 | M.K. ரகுராமன் | சுயேட்சை | 508 |
| 9 | M.K. ரவி | சுயேட்சை | 478 |
| 10 | M. மணி | சுயேட்சை | 332 |
| 147744 |