பல்லாவரம் நகராட்சி அலுவலகம் : படம் எம். முத்துகணேஷ் 
செங்கல்பட்டு

30 - பல்லாவரம்

செய்திப்பிரிவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் அதிமுக
இ.கருணாநிதி திமுக
டி.முருகேசன் அமமுக
செந்தில் ஆறுமுகம் மக்கள் நீதி மய்யம்
க.மினிஸ்ரீ நாம் தமிழர் கட்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொகுதி பல்லாவரம், கடந்த 2011-ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது ஆலந்தூர் தொகுதியில் இருந்து சில பகுதிகளை பிரித்து பல்லாவரம் தொகுதி உண்டாக்கப்பட்டது. இத்தொகுதியில் பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளும், திருநீர்மலை பேரூராட்சியும் பொழிச்சலூர், திரிசூலம் ஆகிய ஊராட்சிகளும் அமைந்துள்ளன.

பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், கீழ்க்கட்டளை உள்ளிட்டவை தொகுதியின் முக்கியமான இடங்கள். பல்லாவரம், பம்மல் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதி ஆகும். எனவே, தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களும் கணிசமான அளவு இருக்கிறார்கள். சமூக ரீதியாகப் பார்த்தால், நாயுடு சமூகத்தினர், தாழ்த்தப்பட்ட மக்கள், வன்னியர்கள் அதிகளவிலும் அதற்கு அடுத்தபடியாக நாடார் சமூகத்தினரும் உள்ளனர். பல்லாவரம் பகுதியில் தென்மாவட்ட மக்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநீர்மலை, திரிசூலம் பகுதியில் கிஷர்களில் இருந்து வரும் தூசியால் எழும் காற்று மாசு, பம்மல், சங்கர் நகர், நாகல்கேணி பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு, அதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் குடிநீர் பிரச்சினை, பல்லாவரம் பெரிய ஏரி பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகைமூட்டம் என பல்வேறு பிரச்சினைகளை தொகுதி மக்கள் முன்வைக்கிறார்கள்.

பம்மல், பல்லாவரம், அனாகபுத்தூர் நகராட்சிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் இன்னும் நிறைவேற்றவில்லை. பல்லாவரம் குன்றத்தூர் சாலை விரிவாகம் செய்யப்படவில்லை. குரோம்பேட்டையில் சுரங்கபாதை பணி தொடங்கப்படவில்லை. பொழிச்சலூரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். பம்மலில் சிறைச்சாலை என்ற வருவாய்த் துறை ஆவணங்களை மாற்றவேண்டும். மூன்று நகராட்சிகளில் குப்பைகளை முறையாக கையாள முறையான திட்டம் இல்லை. மறைமலை அடிகளார் இல்லம் இன்னும் அரசு நினைவிடமாக மற்றப்படவில்லை.

கீழ்க்கட்டளையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் வசிப்பவர்களுக்கு நிரந்தர வரன்முறை செய்து அங்கீகாரம் அளிக்க வேண்டும். என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.

தொகுதி உருவாக்கப்பட்ட பின் 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த பி.தன்சிங் வெற்றி பெற்றது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் இ. கருணாநிதி, 1 லட்சத்து 12 ஆயிரத்து 891 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சி.ஆர். சரஸ்வதி 90 ஆயிரத்து 726 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

2,09,885

பெண்

2,11,710

மூன்றாம் பாலினத்தவர்

35

மொத்த வாக்காளர்கள்

4,21,630

2016 தேர்தல வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

சி.ஆர்.சரஸ்வதி

அதிமுக

2

இ.கருணாநிதி

திமுக

3

கி.வீரலட்சுமி

தமிழர் முன்னேற்றப் படை

4

ஆர்.வெங்கடேசன்

பாமக

5

டாக்டர் ஏ.கோபி அய்யாசாமி

பாஜக

6

பி.சீனிவாச குமார்

நாம் தமிழர்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பி.தன்சிங்

அதிமுக

105631

2

தா மோஅன்பரசன்

திமுக

88257

3

குமார்

எல்.எஸ்.பி

1082

4

ராஜப்பா

பிஎஸ்பி

1074

5

சாம் யேசுதாஸ்

ஐஜேகே

1052

6

அன்பரசு

புபா

739

7

வெங்கடேசன்

சுயேச்சை

609

8

ராமலிங்கம்

ஐக்கிய ஜனதா தளம்

365

9

ருக்மாங்கதன்

சுயேச்சை

338

10

R. தனசிங்

சுயேச்சை

318

11

சண்முகம்

சுயேச்சை

311

12

அருணகிரி

பிபிஐஎஸ்

191

13

ஹாரிபுல்லாஹ்

சுயேச்சை

136

14

பால்ராஜ்

சுயேச்சை

133

15

சதீஷ்குமார்

சுயேச்சை

110

16

ஸ்ரீநிவாசன்

சுயேச்சை

109

200455

SCROLL FOR NEXT