2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| பா.வளர்மதி | அதிமுக |
| தா.மோ.அன்பரசன் | திமுக |
| எம்.முகம்மது தமீம் அன்சாரி | அமமுக |
| சரத் பாபு | மக்கள் நீதி மய்யம் |
| இரா.கார்த்திகேயன் | நாம் தமிழர் கட்சி |
1967, 1971 சட்டப்பேரவை தேர்தல்களில் எம் ஜி ஆர், திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற இத்தொகுதி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடம்பெறுகிறது. தியாகராய நகர், சைதாப்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், சோழிங்கநல்லூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
செயின்ட் தாமஸ் மவுன்ட் - பல்லாவரம் (கண்டோன்மென்ட் போர்டு), சென்னை மாநகராட்சியின் 156 முதல் 167 வார்டுகள், மூவரசம்பேட்டை, கவுல் பஜார், கோவூர், பரணிபுத்தூர், கொளப்பாக்கம் கெரும்பாக்கம், பெரியபணிச்சேரி, மவுலிவாக்கம், ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளும் இந்த தொகுதியில் அடங்கும். சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு போன்ற 3 மாவட்டங்களிலும் ஆலந்தூர் தொகுதி இடம்பெற்றுள்ளது.
கடந்த 1967-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக 7 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2011-ல் நடத்த சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட பண்ருட்டி ராமசந்திரன் வெற்றி பெற்றார். பின்னர், அவர் அந்தப் பதவியில் இருந்து விலகியதால் நடைபெற்ற இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் வி.என்.பி. வெங்கட்ராமன் வெற்றி பெற்றார்.
இத்தொகுதியில் மீனம்பாக்கம் விமான நிலையம், கத்திப்பாரா மேம்பாலம், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவை முக்கிய அடையாளமாக இருக்கின்றன. 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த துலுக்காத்தம்மன் கோயில், படைவீடு அம்மன்கோயில், ஆஞ்சநேயர் கோயில் ஆகிய இந்துக்களின் முக்கிய வழிப்பாட்டு தலங்கள் உள்ளன. மயிலாப்பூர், மாம்பலம் பகுதிகளுக்கு அடுத்து இத்தொகுதியில் பிராமணர்கள் அதிகமாக வசிக்கின்றனர். தாழ்த்தப்பட்டோர், முதலியார் வகுப்பு மக்களும் அதிக அளவில் இருக்கின்றனர்.
ஜிஎஸ்டி சாலையில் இருந்து உள்ளே பழவந்தாங்கல் செல்லும் சுரங்கப்பாதையை நங்கநல்லூர் 5-வது பிரதான சாலைவரை இணைக்க வேண்டும். இந்த சுரங்கப்பாதை தற்போது குறுகியதாக இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பரங்கிமலையில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மொத்தம் 4 சுரங்கப்பாதைகள் இருப்பதால் கனமழை பெய்யும்போது, உள்பகுதிக்கு செல்ல போக்குவரத்து தடை ஏற்படுகிறது. மேலும், சுரங்கப்பாதையில் நிரம்பும் நீரால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, தில்லை கங்காநகர் பகுதியில் இருந்து ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்கவேண்டும், ஆதாம்பாக்கம் ஏரியை சீரமைக்க வேண்டும், பச்சையம்மன் ரயில்வே கேட், ரயில்வே சுரங்கப்பாதை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதேபோல் நிதி பள்ளி அருகே நடைமேம்பாலம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மூவரசம்பேட்டை, கவுல் பஜார், கோவூர், பரணிபுத்தூர், கொளப்பாக்கம் கெருகம்பாக்கம், பெரியபணிச்சேரி, மவுலிவாக்கம், ஐயப்பன்தாங்கல் போன்ற ஊராட்சிகள் பெரிய அளவில் வளர்ந்துள்ளன. ஆலந்தூரை பேரூராட்சியாகவோ, நகராட்சியாகவோ தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், மழைநீர் வடிகால் அமைக்கவும் கோரிக்கைகள் கொட்டிக் கிடக்கின்றன.
மணப்பாக்கத்தில் சுடுகாடு அமைப்பதில் ராணுவத்துக்கும் மக்களுக்கும் உள்ள பிரச்சனை தீர்க்கப்படவில்லை. சென்னை மெட்ரோ வட்டார் சார்பில் ஆதம்பாக்கம், பழவந்தாங்கலில் கழிவுநீர் உந்து நிலையம் அமைப்பதில் காலதாமதம் தொடருகிறது.
கடந்த 2016-ல் நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் 96,877 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் 77,708 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,85,228 |
| பெண் | 1,88,720 |
| மூன்றாம் பாலினத்தவர் | 80 |
| மொத்த வாக்காளர்கள் | 3,74,028 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | பண்ருட்டி எஸ்.ராமசந்திரன் | அதிமுக |
| 2 | தா.மோ.அன்பரசன் | திமுக |
| 3 | யு.சந்திரன் | தேமுதிக |
| 4 | இரா.சீனிவாசன் | பாமக |
| 5 | டாக்டர் எஸ்.சத்தியநாராயணன் | பாஜக |
| 6 | ஆர்.தனஞ்செயன் | நாம் தமிழர் |
ஸ்ரீபெரும்புதூர் வட்டம்
அய்யப்பன்தாங்கல் தெள்ளியார் அகரம், கொளுத்துவான்சேரி, சீனிவாசபுரம், கோவூர், சின்னபணிச்சேரி, பரணிபுத்தூர், பெரியபணிச்சேரி, மௌலிவாக்கம், மதனந்தபுரம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தண்டலம், தரப்பாக்கம் மற்றும் இரண்டான்கட்டளை கிராமங்கள்,
மணப்பாக்கம் (சென்சஸ் டவுன்).
தாம்பரம் வட்டம்
கவுல் பஜார் கிராமம், O நந்தம்பாக்கம் (பேரூராட்சி), செயின்ட் தாமஸ்மவுண்ட் - பல்லாவரம் (கண்டோன்மெண்ட் போர்டு), ஆலந்தூர் (நகராட்சி) மற்றும் மூவரசம்பேட்டை (செசன்ஸ் டவுன்)
ஆலந்தூர் தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1967 - 2014)
| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
| 1967 | எம்.ஜி.ஆர் | தி. மு. க |
| 1971 | எம்.ஜி.ஆர் | தி. மு. க |
| 1977 | அப்துல் ரசாக் | அதிமுக |
| 1980 | அப்துல் ரசாக் | அதிமுக |
| 1984 | ஆபிரகாம் | திமுக |
| 1989 | சி.சண்முகம் | திமுக |
| 1991 | அண்ணாமலை | அதிமுக |
| 1996 | சி.சண்முகம் | திமுக |
| 2001 | வளர்மதி | அதிமுக |
| 2006 | தா. மோ. அன்பரசன் | திமுக |
| 2011 | பண்ருட்டி இராமச்சந்திரன் | தேமுதிக |
| 2014 | வி. என். பி. வெங்கட்ராமன் | அதிமுக |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | தா.மோ அன்பரசன் | திமுக | 133232 |
| 2 | பா வளர்மதி | அதிமுக | 115322 |
| 3 | விஜயகுமார் | தேமுதிக | 22866 |
| 4 | எச் ராஜா | பிஜேபி | 9298 |
| 5 | வேம்புலி | சுயேச்சை | 1148 |
| 6 | இதயவேந்தன் | பி எஸ் பி | 569 |
| 7 | கஜேந்திரகுமார் | சுயேச்சை | 463 |
| 8 | அகஸ்டின் | சுயேச்சை | 288 |
| 9 | ரமேஷ் | சுயேச்சை | 247 |
| 10 | வசந்த குமார் | சுயேச்சை | 236 |
| 11 | வெங்கடேசன் | சுயேச்சை | 231 |
| 12 | முருகன் | சுயேச்சை | 140 |
| 13 | சண்முகம் | சுயேச்சை | 131 |
| 14 | முனுசாமி | சுயேச்சை | 127 |
| 15 | ஆறுமுகம் | சுயேச்சை | 105 |
| 284403 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | S. ராமசந்திரன் | தேமுதிக | 76537 |
| 2 | DR.காயத்ரி தேவி | காங்கிரஸ் | 70783 |
| 3 | சத்யநாராயணன் | பிஜேபி | 9628 |
| 4 | எல்.அயோத்தி | சுயேச்சை | 2731 |
| 5 | தாமஸ் பர்னபாஸ் | பு பா | 1817 |
| 6 | ஆனந்த் | ஐ ஜே கே | 1265 |
| 7 | கண்ணன் | பி எஸ் பி | 948 |
| 8 | பாலாஜி | ஜேஎம் எம் | 835 |
| 9 | மன்சூர் அலி கான் | எம்எம்கேஎ | 787 |
| 10 | மீனாட்சி சுந்தரம் | எல்எஸ்பி | 552 |
| 11 | ராமகிருஷ்ணன் | சுயேச்சை | 368 |
| 12 | திலகராஜன் | சுயேச்சை | 306 |
| 13 | ரவி | சுயேச்சை | 277 |
| 14 | வரதன் | சுயேச்சை | 277 |
| 15 | முத்துகிருஷ்ணன் | AIPPMR | 243 |
| 16 | கிருஷ்ணமூர்த்தி | சுயேச்சை | 199 |
| 17 | ராஜேந்திரபாபு | சுயேச்சை | 159 |
| 18 | தினகரன் | சுயேச்சை | 145 |
| 19 | எழிலரசு | சுயேச்சை | 142 |
| 20 | முத்தழகன் | பிபிஐஎஸ் | 136 |
| 168135 | |||