2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| டாக்டர் பரமசிவம் | அதிமுக |
| காந்திராஜன் | திமுக |
| கே.பி.ராமசாமி | அமமுக |
| வெற்றிவேல் | மக்கள் நீதி மய்யம் |
| இரா.போதுமணி | நாம் தமிழர் கட்சி |
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் பரப்பளவிலும், வாக்காளர் எண்ணிக்கையிலும் பெரிய தொகுதியாக உள்ள வேடசந்தூர் சட்டசபை தொகுதி. இந்த தொகுதியில் வேடசந்தூர், பாளையம், வடமதுரை, அய்யலூர், எரியோடு ஆகிய பேரூராட்சிகளும், வடமதுரை, வேடசந்தூர், குஜிலியம்பாறை ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளும் உள்ளன.
வறண்ட பகுதியான இந்த தொகுதியில் விவசாயத்தை முழுமையாக நம்பமுடியாத நிலையில் மக்கள், நூற்பாலைகளில் அதிக எண்ணிக்கையில் பணிக்கு செல்கின்றனர். பலர் அருகிலுள்ள கரூர் மாவட்டத்திற்கு வேலைவாய்ப்பு தேடி செல்கின்றனர்.
நூற்பாலைகள் தவிர வேறு தொழில்கள் இப்பகுதியில் இல்லை என்பதால் பலர் வருமானத்திற்கா பிற மாவட்டங்களுக்கு வேலைதேடிச் செல்லும் நிலை தொடர்கிறது. வேடசந்தூர் தொகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டம் ஏட்டளவில் இருந்தும் செயல்பாட்டிற்கு வராததால் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் ஓரளவு குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இருந்தபோதும் நிலத்தடிநீர் மட்டம் குறைவாகவே உள்ளது. குடகனாறு அணையில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுகிறது. இதை யாரும் கண்டுகொள்ளாதநிலை தொடர்கிறது. தொகுதிக்குள் உள்ள குடகனாறு அணை பல ஆண்டுகளாக நிரம்பாமல் உள்ளது. இதனால் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் நிலத்தடிநீரையே நம்பியுள்ள நிலை உள்ளது. மாசுபட்டுகிடக்கும் குடகனாற்றை சீரமைக்க மக்கள் பலமுறை கோரிக்கைவைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
1977 முதல் வேடசந்தூர் தொகுதியில் நடந்த 10 தேர்தல்களில் அதிமுக ஏழு முறையும், திமுக இரண்டு முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது. 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பரமசிவம் வெற்றிபெற்றார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 12,52,95 |
| பெண் | 13,01,87 |
| மூன்றாம் பாலினத்தவர் | 0 |
| மொத்த வாக்காளர்கள் | 25,54,82 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | பி.பரமசிவம் | அதிமுக |
| 2 | ஆர்.சிவசக்திவேல் | காங் |
| 3 | கே.பாலசுப்பிரமணி | தேமுதிக |
| 4 | பி.பழனிச்சாமி | பாமக |
| 5 | எஸ். சிவரஞ்சனி | ஐஜேகே |
| 6 | சு.மோகன்ராஜ் | நாம் தமிழர் |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
| 2006 சட்டமன்ற தேர்தல் | 133. வேடசந்தூர் | ||
| வ எண் | பெயர் | கட்சி | வாக்குகள் |
| 1 | M. தண்டபாணி | காங்கிரஸ் | 68953 |
| 2 | S. பழனிசாமி | அ.தி.மு.க | 54195 |
| 3 | S. வெங்கடசலம் | தே.மு.தி.க | 16693 |
| 4 | A. பரமன் | சுயேச்சை | 2263 |
| 5 | N. பழனிசாமி | பி.ஜே.பி | 2180 |
| 6 | D. தயாலன் | பி.எஸ்.பி | 1445 |
| 7 | P. செல்வராஜ் | சுயேச்சை | 802 |
| 8 | S. தண்டப்பானி | சுயேச்சை | 711 |
| 9 | P. சிவசுப்பிரமணி | சுயேச்சை | 586 |
| 10 | S. ராஜா | என்.சி.பி | 460 |
| 11 | E. ராஜா | ஆர்.எல்.டி | 430 |
| 12 | A. இஸ்மாயில் | சுயேச்சை | 378 |
| 13 | P. குமார் | ஜே.டி | 274 |
| 149370 |
| 2011 சட்டமன்ற தேர்தல் | 133. வேடசந்தூர் | ||
| வ எண் | பெயர் | கட்சி | வாக்குகள் |
| 1 | S. பழனிசாமி | அ.தி.மு.க | 104511 |
| 2 | M. தண்டபானி | காங்கிரஸ் | 53799 |
| 3 | P. வரதராஜ் | சுயேச்சை | 2018 |
| 4 | N. ராஜன் | சுயேச்சை | 1643 |
| 5 | M. பழனிசாமி | பி.எஸ்.பி | 1640 |
| 6 | M. ராமன் | பி.ஜே.பி | 1635 |
| 7 | R. லக்ஷ்மி | சுயேச்சை | 1259 |
| 8 | P. பாலசுப்பிரமணி | சுயேச்சை | 688 |
| 9 | T.V. கோவிந்தராஜ் | சுயேச்சை | 338 |
| 10 | V. கலைசெல்வன் | பு.பா | 300 |
| 11 | J.P. பெரியசாமி | சுயேச்சை | 277 |
| 12 | R. சிவராஜ் | சுயேச்சை | 267 |
| 13 | D. தயாளன் | எல்.ஜே.பி | 209 |
| 14 | V. செல்வராஜ் | சுயேச்சை | 208 |