2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| கோவிந்தசாமி | அதிமுக |
| எம். பிரபு ராஜசேகர் | திமுக |
| பி.பழனியப்பன் | அமமுக |
| வி.ஸ்ரீனிவாசன் | மக்கள் நீதி மய்யம் |
| இரா.ரமேஷ் | நாம் தமிழர் கட்சி |
2011-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பாக தமிழக சட்டப் பேரவை தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. அப்போது, தருமபுரி மாவட்டத்தின் மொரப்பூர் தொகுதி நீக்கப்பட்டு பாப்பிரெட்டிப்பட்டி என்ற புதிய தொகுதி உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி இதுவரை 2 பொதுத் தேர்தல்களையும், 1 இடைத் தேர்தலையும் சந்தித்துள்ளது. இந்த தொகுதியின் முதல் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பழனியப்பன் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் பணியாற்றினார்.
இந்த தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் அதிக அளவிலும், அடுத்த நிலையில் பட்டியல் இனத்தவர்களும், அதற்கு அடுத்த நிலையில் கொங்கு வேளாளர் சமூகத்தினரும் வசிக்கின்றனர். இவர்கள் தவிர, இதர பிற்படுத்தப்பட்ட பல்வேறு சமூக மக்களும் இத் தொகுதியில் வசிக்கின்றனர். தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ-வாக அதிமுக-வின் கோவிந்தசாமி உள்ளார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
கடத்தூர், பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 3 பேரூராட்சிகள் இந்த தொகுதியில் உள்ளன. இவை தவிர, மணியம்பாடி, சிந்தல்பாடி, புட்டிரெட்டிப்பட்டி, பெத்தூர், சிக்கம்பட்டி, அண்ணாமலைப்பட்டி, தென்கரைக்கோட்டை, ராமியான அள்ளி, ரேகட அள்ளி, பாப்பம்பாடி, ஆலாபுரம், மெனசி, பொம்மிடி, பையர்நத்தம், அதிகாரப்பட்டி, இருளப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, கே.நடுஅள்ளி, கோணாங்கிநாயக்கன அள்ளி, கிருஷ்ணாபுரம், புழுதிகரை, பழைய தருமபுரி, செட்டிகரை, மூக்கனூர், வெள்ளோலை, வத்தல்மலை, உங்கரான அள்ளி,
திப்பிரெட்டிஅள்ளி, கொண்டகர அள்ளி என பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி வட்டங்களில் உள்ள கிராமங்களும் இடம்பெற்றுள்ளன.
தொகுதியின் பிரச்சினைகள்:
வாணியாறு அணையின் பாசன கால்வாயை நீட்டிப்பு செய்து மேலும் 20 ஏரிகளுக்கு பாசன நீர் வழங்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். சேலம்-சென்னை இடையே அமைக்க திட்டமிடப்பட்ட 8 வழிச் சாலையால் இந்த தொகுதியில் வசிக்கும் விவசாயிகள் பலரின் நிலமும் கையகப்படுத்தப்படும் என்ற அச்ச மனநிலை உள்ளது.
கட்சிகளின் வெற்றி விவரம்:
இந்த தொகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை 2 பொதுத் தேர்தல்களும், 1 இடைத் தேர்தலும் நடந்துள்ளது. இந்த 3 தேர்தல்களிலும் அதிமுக வேட்பாளரே வெற்றி பெற்றுள்ளார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,30,571 |
| பெண் | 1,28,879 |
| மூன்றாம் பாலினத்தவர் | 7 |
| மொத்த வாக்காளர்கள் | 2,59,457 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | பி.பழனியப்பன் | அதிமுக |
| 2 | எம்.பிரபு ராஜசேகர் | திமுக |
| 3 | ஏ.பாஸ்கர் | தேமுதிக |
| 4 | ஏ.சத்தியமூர்த்தி | பாமக |
| 5 | எம்.சுந்தரமூர்த்தி | ஐஜேகே |
| 6 | எம்.மூவேந்தன் | நாம் தமிழர் |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
| 2011 சட்டமன்ற தேர்தல் | 60. பாப்பிரெட்டிப்பட்டி | ||
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | P. பழனியப்பன் | அ.தி.மு.க | 76582 |
| 2 | V. முல்லைவேந்தன் | தி.மு.க | 66093 |
| 3 | M. வேலு | சுயேச்சை | 18710 |
| 4 | P. சங்கர் | சுயேச்சை | 2130 |
| 5 | P. மூர்த்தி | சுயேச்சை | 1270 |
| 6 | P. வைகுண்டன் | பி.எஸ்.பி | 1037 |
| 7 | S. ஜெயாகுமார் | பி.ஜே.பி | 707 |
| 8 | C. பொன்மணி | சுயேச்சை | 415 |
| 9 | A. அம்சவேணி | ஐ.ஜே.கே | 338 |
| 10 | K. சின்னசாமி | சுயேச்சை | 334 |
| 11 | V. குமாரன் | சுயேச்சை | 308 |
| 12 | S. சரவணன் | சுயேச்சை | 286 |
| 13 | K. ராஜன் | பி.பி. | 281 |
| 14 | K. அண்ணாதுரை | யு.எம்.கே | 240 |
| 168731 |