வேளச்சேரி ரயில் நிலையம். 
சென்னை

26 - வேளச்சேரி

செய்திப்பிரிவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
அசோக் அதிமுக
ஜே.எம்.ஹெச்.ஹாசன் திமுக
எம்.சந்திரபோஸ் அமமுக
டாக்டர் சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம்
மோ.கீர்த்தனா நாம் தமிழர் கட்சி

தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் சென்னையில் கடந்த 2011-ம் ஆண்டு உருவானது வேளச்சேரி தொகுதி. சென்னை மாநகராட்சியின் 177-வது வார்டில் இருந்து 182-வது வார்டுகளில் உள்ள வேளச்சேரி, விஜயநகர், அடையாறு கிழக்கு மற்றும் மேற்கு, திருவான்மியூர் கிழக்கு மற்றும் மேற்கு மற்றும் தரமணி, பெசன்ட்நகர் பகுதிகள் தொகுதியில் உள்ளன. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக வேளச்சேரி தொகுதி உள்ளது.

இத்தொகுதியில், கடந்த நவம்பர் (2020) 16-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி, 1 லட்சத்து 51 ஆயிரத்து 535 ஆண்கள், 1 லட்சத்து 54 ஆயிரத்து 571 பெண்கள், 83 இதர வாக்காளர்கள் என மொத்தம் 3 லட்சத்து 6 ஆயிரத்து 189 வாக்காளர்கள் உள்ளனர்.

தென்சென்னையில் வளர்ந்து வரும் முக்கிய பகுதியான வேளச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள் அதிகரித்து வருகின்றன. ஆசியாவில் மிகப்பெரிய ஷாப்பிங் மாலான ஃபீனிக்ஸ் மால் வேளச்சேரில் உள்ளது. வேளச்சேரியின் முக்கிய அடையாளமாக வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம் உள்ளது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக வேளச்சேரி தொகுதி விளங்குகிறது. வேளச்சேரி தொகுதியில் தாழ்த்தப்பட்டோர், நாயக்கர் சமுதாய மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவை தவிர தொகுதியில் கிராமணி, முதலியார், பிராமனர் மற்றும் கிறிஸ்துவர்களும் வசிக்கின்றனர். 1972-ம் ஆண்டு வேளச்சேரியில் தாழ்த்தபட்டவர்களுக்கும், நாயக்கர்களுக்கும் இடையே பெரிய அளவினான சாதி கலவரமும் நடந்துள்ளது.

இந்த தொகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் ஐடி நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். மழைக்காலங்களில் வேளச்சேரி, தரமணி பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் நிலை உள்ளது. குடியிருப்புகள் சுற்றிலும் மழைநீர் தேங்குவதால் ஒருவாரத்துக்கு மக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்படுகிறது. மழைநீர் வடிக்கால், மேம்பாலங்கள் சாலை வசதிகள் போன்றவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. பறக்கும் ரயில் ரயிலை பரங்கிமலை வரை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கால் வேளச்சேரி மக்கள் சுவாசக் கோளாறு உட்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

வேளச்சேரி தொகுதி முதல் முறையாக 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தது. அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.கே.அசோக் வென்றார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வாகை சந்திரசேகர் 70,139 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நீலாங்கரை எம்.சி.முனுசாமி 61,267 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,51,535

பெண்

1,54,571

மூன்றாம் பாலினத்தவர்

83

மொத்த வாக்காளர்கள்

3,08,189

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

அசோக்

அதிமுக

82145

2

ஜெயராமன்

பாமக

50425

3

சரத்பாபு

சுயேச்சை

7472

4

தமிழிசை சௌந்தராஜன்

பிஜேபி

7048

5

செந்தில் குமார் ஆறுமுகம்

எல் எஸ் பி

1225

6

சேஷாத்ரி

ஐ ஜே கே

1036

7

கர்ணன்

பி எஸ் பி

658

8

ஜெய்சங்கர்

சுயேச்சை

596

9

விஜயகுமார்

பு பா

435

10

பாலகிருஷ்ணன்

சுயேச்சை

335

11

அன்பழகன்

எம்எம்கேஎ

317

12

கிருஷ்ணமூர்த்தி

சுயேச்சை

291

13

ராமசாமி

எ பி எம்

244

14

சிவகுமார்

சுயேச்சை

137

152364

SCROLL FOR NEXT