மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் 
சென்னை

25 - மயிலாப்பூர்

செய்திப்பிரிவு

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
ஆர்.நட்ராஜ் அதிமுக
த.வேலு திமுக
டி.கார்த்திக் அமமுக
ஸ்ரீப்ரியா மக்கள் நீதி மய்யம்
சி.மகாலட்சுமி நாம் தமிழர் கட்சி

நீதிக்கட்சி காலத்தில் இருந்தே தேர்தலை சந்தித்து வரும் மயிலாப்பூர் சென்னையின் மிகப் பழமையான தொகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. கபாலீஸ்வரர் கோயில், ராமகிருஷ்ணர் மடம், அப்பர்சாமி கோயில், ஆதிகேசவ பெருமாள் கோயில் என பழைமை வாய்ந்த இந்து ஆலயங்களும், லஸ், சாந்தோம் என கிறிஸ்தவ தேவாலயங்களையும் கொண்ட ஆன்மீக தொகுதியாக மயிலாப்பூர் இருந்து வருகிறது. செட்டிநாட்டு அரண்மனை உள்ள ராஜா அண்ணாமலைபுரம் இந்த தொகுதியில் தான் வருகிறது.

இந்த தொகுதியில் பிராமணர்கள் அதிகம் உள்ளனர். வன்னியர் மற்றும் கிராமணி சமூகத்தினரும் கணிசமான அளவுக்கு இருக்கின்றனர். ராமகிருஷ்ணா கல்லூரி, சமஸ்கிருத கல்லூரி, பி.எஸ் மேல் நிலைப்பள்ளி போன்றவையும் மயிலாப்பூர் தொகுதியின் பழம்பெருமை வாய்ந்த கல்வி நிறுவனங்கள் ஆகும். சங்கீத சபாக்கள் அதிகம் கொண்ட பகுதியாகவும் மயிலாப்பூர் விளங்குகிறது.

சாந்தோம், ஆழ்வார்ப்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், அவ்வை நகர் போன்ற பகுதிகள் மயிலாப்பூர் தொகுதிக்கு கீழ் வருகின்றன. சென்னை மாநகராட்சியின் மண்டலம் 6,8,10 ஆகியவை மயிலாப்பூர் தொகுதியில் வருகின்றன. நிறைய ஆன்மீகத் தலங்களை கொண்ட மயிலாப்பூர் தொகுதியில், ஆண்டுதோறும் ஊர்வலம், வீதி உலா என்று விழாக்கோலமாக காட்சியளிக்கும் பிரதான சாலைகளே மிகக் குறுகளாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ராமகிருஷ்ண மடம் சாலை, லஸ் தேவாலய சாலை போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகளவில் உள்ளது. இது தவிர தண்ணீர் பிரச்சினையும் அவ்வப்போது எழுகிறது.

போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலைகள் விரிவாக்கம், சென்னை கடற்கரை இருந்து மயிலாப்பூர் வழியாக வேளச்சேரி செல்லும் மின்சார ரயில் சேவை, பரங்கிமலை வரையில் நீடிக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும். குடிநீர் வசதி முறையாக செய்து தர வேண்டுமென்பது இந்த பகுதிகளின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

சென்னை மாகாணமாக இருந்த போது 1952 முதல் 1967 வரை 4 தேர்தல்களும், அதன் பிறகு, இதுவரையில் 11 தேர்தல்களையும் மயிலாப்பூர் தொகுதி சந்தித்துள்ளது. இத்தொகுதியின் முதல் எம்.எல்.ஏ. காங்கிரஸ் கட்சியின் சி.ஆர்.ராமசாமி ஆவார். பிராமணர்கள் அதிகம் உள்ள இந்தத் தொகுதியை 1962-ல் முதன் முறையாக திமுக கைப்பற்றியது. 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் கே.என்.லட்சுமணன் இந்த தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். ஆனால், கடந்த 3 தேர்தல்களிலும் அதிமுகவே இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. 2016-ல் அதிமுக சார்பில் ஆர்.நடராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,30,621

பெண்

1,38,739

மூன்றாம் பாலினத்தவர்

40

மொத்த வாக்காளர்கள்

2,69,400

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

மைலாப்பூர் தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1952 - 2011)

சட்டமன்ற தேர்தல் ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

ஆர். ராஜலட்சுமி

அதிமுக

2006

எஸ். வி. சேகர்

அதிமுக

42.62

2001

K.N.லக்ஷமணன்

பா.ஜ.க

51.09

1996

N.P.இராமஜெயம்

திமுக

67.25

1991

T.M. இரங்கராஜன்

அதிமுக

59.31

1989

N. கணபதி

திமுக

40.88

1984

பா.வளர்மதி

அதிமுக

51.68

1980

T.K. கபாலி

அதிமுக

49.66

1977

T.K. கபாலி

திமுக

33.75

1971

டி. என். அனந்தநாயகி

ஸ்தாபன காங்கிரஸ்

1967

அரங்கண்ணல்

திமுக

1962

அரங்கண்ணல்

திமுக

1957

சி.ஆர்.ராமசாமி

காங்கிரஸ்

1952

சி.ஆர்.ராமசாமி

காங்கிரஸ்

2006 – தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

S .Ve .சேகர்

அதிமுக

62794

2

D .நெப்போலியன்

திமுக

61127

3

சந்தானகோபாலன்

எல்கேபிடி

9436

4

V .N .ராஜன்

தேமுதிக

7441

5

V .S .சந்திரலேகா

ஜனதா

2898

6

அமெரிக்கை வி.நாராயணன்

சுயேச்சை

1961

7

வீரராகவன்

சுயேச்சை

671

8

பிரேம்குமார்

சுயேச்சை

192

9

அருள்

சுயேச்சை

150

10

C .சேகர்

சுயேச்சை

147

11

பார்த்திபன்

சுயேச்சை

132

12

மோகன்ராஜ்

ஜே ஜே

112

13

டாமினிக்

சுயேச்சை

87

14

சந்திரசேகரன்

சுயேச்சை

72

15

கோகுலநாதன்

சுயேச்சை

64

16

தாசபிரகாஷ்

ஆர் எல் டி

61

147345

2011 – தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

ராஜலக்ஷ்மி

அதிமுக

80063

2

K .V .தங்கபாலு

காங்கிரஸ்

50859

3

வானதி ஸ்ரீனிவாசன்

பிஜேபி

6911

4

அசோக் ராஜேந்திரன்

எல் எஸ் பி

1340

5

பிரவீன்குமார்

சுயேச்சை

527

6

J .ராஜேந்திரன்

சுயேச்சை

500

7

சிவகாமி

சுயேச்சை

493

8

ரங்கராஜன்

சுயேச்சை

437

9

மோகன்

சுயேச்சை

377

10

P .ராஜேந்திரன்

பிபிஐஎஸ்

278

11

கோபி நாராயண் யாதவ்

எம்எம்கேஎ

217

12

முருகேசன்

சுயேச்சை

168

13

மோகன்ராஜ்

ஜே ஜே

167

14

சரவணன்

சுயேச்சை

144

15

பிரான்சிஸ்

சுயேச்சை

136

16

சாந்தலிங்கம்

சுயேச்சை

106

17

கதிரவன்

சுயேச்சை

80

18

சந்திரமோகன்

சுயேச்சை

79

142882

SCROLL FOR NEXT