2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| கஸ்ஸாலி (பாமக) | அதிமுக |
| உதயநிதி ஸ்டாலின் | திமுக |
| எல்.ராஜேந்திரன் | அமமுக |
| முகம்மது இத்ரிஸ் | மக்கள் நீதி மய்யம் |
| மு.ஜெயசிம்மராஜா | நாம் தமிழர் கட்சி |
தமிழகத்திலேயே சிறிய தொகுதியாக இருந்துவந்த சேப்பாக்கம் தொகுதியில் திருவல்லிக்கேணி தொகுதியின் சில பகுதிகள் இணைக்கப்பட்டு கடந்த 2011-ல் சட்டப்பேரவை தேர்தலில் புதிய தொகுதியாக உருவெடுத்தது. 2006-ம் வரை சேப்பாக்கம் தொகுதி என்று அழைக்கப்பட்டு வந்தது.. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி என்று அழைக்கப்படுகிறது. சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் மு.கருணாநிதி தொடர்ந்து 3 முறை போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் இதற்கு விஐபி தொகுதி என்ற அந்தஸ்தும் உண்டு. மேலும், விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் அதன் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் பாஜக சார்பில் நடிகை குஷ்புவும் போட்டியிடக்கூடும் என்ற பேச்சு பரவலாக அடிபடுவதால் தற்போது இன்னும் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது.
இத்தொகுதி சென்னை மாநகராட்சியின் வார்டு-79, 81 முதல் 93 வரை மற்றும் 111 ஆகிய வார்டுகளை உள்ளடக்கியது. துறைமுகம், மயிலாப்பூர், எழும்பூர், ஆயிரம் விளக்கு ஆகிய சட்டப் பேரவை தொகுதிகள் தொகுதியின் எல்லைகளாக அமைந்துள்ளன. மெரினா கடற்கரை, சென்னை பல்கலைக்கழகம், எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம், பல்வேறு அரசு அலுவலகங்களின் தலைமை அலுவலகங்கள் இயங்கும் எழிலக கட்டிடம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பெரிய மசூதி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ரிச் தெரு போன்றவை தொகுதியின் முக்கிய அடையாளங்களாக விளங்குகின்றன. சென்னை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இத்தொகுதியில் சிறுபான்மையின மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். தேர்தலில் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாகவும் அவர்கள் திகழ்கிறார்கள்.
சென்னை மாநகராட்சியின் வார்டு 79, 81 முதல் 93 வரை, 95 மற்றும் 111 ஆகியவை இத்தொகுதிக்கு உட்பட்டவை.
போக்குவரத்து நெருக்கடி, கழிவுநீர் வெளியேற்றுதல், குப்பைகள் அகற்றுதல், சாலை வசதி மேம்பாடு தொகுதிவாசிகளின் முக்கிய கோரிக்கை ஆகும்.
கடந்த 20.1.2021 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, இத்தொகுதியில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 80 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 204 பெண் வாக்காளர்கள், 35 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 34 ஆயிரத்து 319 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த 1977 முதல் 2011 வரை நடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில் 8 முறை திமுகவும், 1991 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. 1996, 2001, 2006 ஆகிய 3 சட்டப் பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 3 முறை போட்டியிட்டு திமுக தலைவர் மு.கருணாநிதி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு 2011, 2016-ல் தேர்தல்களில் திமுகவின் ஜெ.அன்பழகன் வென்றார். அவர் கடந்த 2016 தேர்தலில் 67 ஆயிரத்து 982 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆ.நூர்ஜகான் 53 ஆயிரத்து 818 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். தொகுதி உறுப்பினராக இருந்த ஜெ.அன்பழகன் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் மாதம் 10-ம் தேதி கரோனா தொற்று காரணமாக காலமானார். இடைத்தேர்தல் நடத்தப்படாததால் புதிய உறுப்பினர் தேர்வுசெய்யப்படாமல் இடம் காலியாகவே இருந்து வருகிறது.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,15,080 |
| பெண் | 1,19,204 |
| மூன்றாம் பாலினத்தவர் | 35 |
| மொத்த வாக்காளர்கள் | 2,34,319 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 – தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | J .அன்பழகன் | திமுக | 64191 |
| 2 | தமீமுமன்சாரி | MAMAK | 54988 |
| 3 | வெங்கடராமன் | பிஜேபி | 5374 |
| 4 | அப்துல் ரஹீம் | ஐஎன்எல் | 1271 |
| 5 | ரகு | பி எஸ் பி | 894 |
| 6 | ஸ்ரீதரன் | சுயேச்சை | 812 |
| 7 | சுந்தரி | சுயேச்சை | 473 |
| 8 | பிரபு | பு பா | 443 |
| 9 | ஹமீது ஹுசைன் | ஆர் பி ஐ | 375 |
| 10 | அன்பழகன் | சுயேச்சை | 341 |
| 11 | ஜெகபதி கிருஷ்ணன் | சுயேச்சை | 187 |
| 12 | ராஜசேகரன் | சுயேச்சை | 178 |
| 13 | நாகராஜ் | சுயேச்சை | 178 |
| 14 | திருமலை பாண்டி | சுயேச்சை | 131 |
| 129836 |
2006 – தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | கருணாநிதி | திமுக | 34183 |
| 2 | தாவூன் மியாகான் | சுயேச்சை | 25662 |
| 3 | நாராயணசாமி பி | தேமுதிக | 3681 |
| 4 | சிவனேசன் | பிஜேபி | 1124 |
| 5 | இளந்திருமாறன் | எல்.கே.பி.டி. | 669 |
| 6 | முகமது மீரா.ஏ | சுயேச்சை | 349 |
| 7 | மியா கான் | சுயேச்சை | 272 |
| 8 | சுப்பிரமணியன் | சுயேச்சை | 238 |
| 9 | கருணாநிதி | சுயேச்சை | 223 |
| 10 | அன்பழகன் | சுயேச்சை | 341 |
| 11 | தலித் குடிமகன் என்ற தயா கிருஷ்ணமூர்த்தி | பிஎஸ்பி | 105 |
| 12 | சாய் கணேஷ் | சுயேச்சை | 91 |
| 13 | பத்மராஜன் | சுயேச்சை | 178 |
| 14 | ஜாபர் அலி | சுயேச்சை | 88 |
| 15 | பாலாஜி வெங்கடேஸ்வரவன் | சுயேச்சை | 69 |
| 16 | பாலாஜி.பி. | ஆர்.எல்.டி | 51 |
| 17 | ரகுராமன் | சுயேச்சை | 44 |
| 18 | அமிதியூஸ் | சுயேச்சை | 35 |
| 19 | சத்யவேலு | சுயேச்சை | 34 |
| 20 | வேணுகோபால் | சுயேச்சை | 30 |
| 21 | சுப்பையா | சுயேச்சை | 27 |