அதிமுக அலுவலகத்துக்கு ஏராளமான தொண்டர்களுடன் வந்திருந்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் அம்மா பேரவை மாநில இணைச் செயலாளருமான வா.புகழேந்தி ஓசூர் தொகுதியிலும் சென்னை அண்ணாநகர் தொகுதியிலும் போட்டியிட மனு அளித்தார்.
3 முறை ஓசூர் தொகுதியின் பொறுப்பாளராக பணியாற்றியதை நினைவுகூர்ந்த புகழேந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என பல மொழிகள் பேசும் மக்கள் அதிகமாக உள்ள தொகுதிகள் ஓசூர் மற்றும் அண்ணாநகர் என்றும் அண்ணாநகரில் வியாபார ரீதியாக பல ஆண்டுகள் வசித்ததையும் கூறிய அவர், அங்கும் தேர்தல் பணியாற்றியதை நினைவுகூர்ந்தார்.
மேலும், டிடிவி தினகரன் எங்கு நின்றாலும் அவரை தலைமை அனுமதியோடு எதிர்த்துப் போட்டியிடத் தயார் என கூறினார். ‘‘தினகரன் ஆர்.கே.நகர் வாக்காளர்களை ஏமாற்றியுள்ளார். தொகுதி பக்கமே போவதில்லை. ஆகவே ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் அவர் எங்கு நின்றாலும் அவரை தோற்கடிக்க என்னோடு களம் காண்பார்கள்’’ என்றார் புகழேந்தி.