Regional01

பேருந்தில் கிடந்த பணத்தை ஒப்படைத்த மதுரை இளைஞருக்கு போலீஸார் பாராட்டு

செய்திப்பிரிவு

மதுரை வடக்கு நவனேரிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் இளவரசன் (27). இவர் நேற்று முன்தினம் மதுரையில் இருந்து ஓசூர் செல்லும் பேருந்தில் பயணம் செய்தார். பேருந்து சேலம் வந்தபோது, பேருந்தில் மணிபர்ஸ் ஒன்று கீழே கிடந்தது. அதை இளவரசன் எடுத்துப் பார்த்தபோது அதில் 4,080 ரூபாய் மற்றும் ஏடிஎம் கார்டு இருந்தது.

இதையடுத்து, அதை அவர் சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், சேலம் வேம்படிதாளத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பேருந்தில் பர்ஸை தவறவிட்டது தெரிந்தது. மணிகண்டனிடம் பர்ஸை ஒப்படைத்த போலீஸார், இளவரசனை பாராட்டினர்.

SCROLL FOR NEXT