வடலூர் ரயில்வே கேட் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
Regional01

வடலூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

வடலூரில் ரயில்வே கேட் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிநேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வடலூர் ரயில்வே கேட் அருகே டாஸ்மாக் கடை கடந்த ஒரு மாதம் முன்பு திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடையால் அந்த வழியாக பொதுமக்கள், பெண்கள் நடந்து செல்வதற்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டுள்ளது. மதுக்கடையை மூடக்கோரி வடலூர் ரயில்வே கேட் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜனநாயக மாதர் சங்க செயலாளர் ராதிகா தலைமை தாங்கினார். இதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்என்று முழக்கங்கள் எழுப்பினர். நெய்வேலி டிஎஸ்பி கங்காதரன்மற்றும் போலீஸார் பேச்சு வார்த்தைநடத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT