Regional02

குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

செய்திப்பிரிவு

திண்டுக்கல் அருகே பள்ளபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேகம் ஷாயிபா நகரில் கடந்த ஒரு மாதமாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத் திடம் பலமுறை மக்கள் முறை யிட்டும் பலனில்லை.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலை குட்டியபட்டி பிரிவில் மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் தாலுகா போலீ ஸார் பொதுமக்களை சமாதானப் படுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT