தமிழக சட்டப்பேரவை தேர்தலைமுன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத் தில் தெய்வச்செயல்புரம், கீழத் தட்டப்பாறை மற்றும் மேலத் தட்டப்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள வெடிமருந்து கிடங்குகளில் எஸ்பி ஜெயக்குமார் நேற்றுதிடீர் ஆய்வு மேற்கொண்டார்.இப்பகுதிகளில் கல்குவாரி மற்றும்கிணறு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை சேமித்து வைக்கும் மூன்று கிடங்குகள் உள்ளன. அவற்றை பார்வையிட்ட எஸ்பி, அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
‘‘வெடிமருந்து பொருட்களை கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும். வருவாய்த்துறையினரிடம் உரிய அனுமதிபெற்று, உரிய சான்றோடு வருபவர்களுக்கு மட்டுமேவிற்பனை செய்ய வேண்டும். மீதம்உள்ள வெடி பொருட்களை மீண்டும்அவர்களிடமிருந்து, திரும்பப்பெற்று பாதுகாப்பான முறையில் கிடங்கில் இருப்பு வைக்க வேண்டும். முன்பின் தெரியாதவர்களுக்கோ, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கோ விற்பனை செய்யக்கூடாது' என்று உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.