தேர்தல் 2021

சுதீஷ் முகநூல் பதிவால் பரபரப்பு

செய்திப்பிரிவு

அதிமுக - தேமுதிக கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், தேமுதிக துணை செயலரின் ஃபேஸ்புக் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவை இறுதி செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க தேமுதிக துணை செயலர் எல்.கே.சுதீஷ் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பிற்கான நேரம் இறுதியாகவில்லை.

இதற்கிடையே, தேமுதிக துணை செயலர் எல்.கே.சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை நேற்று வெளியிட்டிருந்தார். அதில், ‘‘நமது முதல்வர் (விஜயகாந்த் புகைப்படம்), நமது கொடி என அக்கட்சி கொடியையும், நமது சின்னம் என அக்கட்சியின் முரசு சின்னத்தையும் பதிவிட்டிருந்தார். இது, அதிமுகவுடனான கூட்டணி என்ன ஆனது?, தேமுதிக தனித்து போட்டியிடுகிறதா? என கேள்வியை எழுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT